பிரார்த்தனையின் விஞ்ஞானம்

சூரிய அஸ்தமனத்தின் போது பிரார்த்தனை.

வலிமையான மற்றும் ஆழமான ஒரு பிரார்த்தனை நிச்சயமாக இறைவனின் பதிலைப் பெறும். சமயத்தில், விஞ்ஞானத்தின் பயன்பாடு மூலம் ஆன்மீக சாத்தியங்களில் உள்ள உங்கள் திடமற்ற நம்பிக்கை, அவற்றின் மிக உயரிய நிறைவேற்றத்தின் மெய்ம்மையாக மாற்ற முடியும்

— ஶ்ரீ ஶ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்.

பிரபஞ்சத்தைத் தாங்கும் அன்புதான் இறைவன் – அனைத்துப் படைப்பையும் ஊடுருவும் உயிர் மற்றும் சக்தியின் பெருங்கடல். பிரார்த்தனையின் விஞ்ஞானபூர்வ வழிமுறைகள் மூலம், நாம் அந்த எல்லையற்ற சக்தியுடன் ஒத்திசைந்து, உடல் மனம் மற்றும் ஆன்மாவிற்கு குணமளிப்பைக் கொணர முடியும்.

சில மனிதர்கள், பிரார்த்தனையை விருப்பத்தால் எண்ணத்தின் அடிப்படையில் செய்யும் ஒரு தெளிவற்ற மற்றும் பயனற்ற முயற்சி என்று நினைக்கிறார்கள். சாதாரண மனிதன், பயங்கரத் துன்பத்தில் இருக்கும் போதும் மற்ற விருப்பத்தேர்வுகள் தோல்வி அடைந்த பின்புதான் பிரார்த்தனையை நாடுகிறான். ஆனால் பரமஹம்ஸ யோகானந்தர், அனைத்துப் படைப்பையும் கட்டுப்படுத்தும் துல்லியமான விதிமுறைகளின் அடிப்படையிலான உண்மையான பிரார்த்தனை விஞ்ஞானப் பூர்வமானது மற்றும் இணக்கமான வாழ்க்கைக்கு ஒரு தினசரி தேவை என்றும் கூறுகிறார்.

Galaxy as a part of God's creation.நமது ஸ்தூல தேகங்களும் மற்றும் நாம் வாழும் பருப்பொருள் உலகமும் கட்புலனாகாத சக்தி தினுசுகளின் உரை பொருட்கள் என்று அவர் விளக்கினார். அந்த சக்தி, முறையே, சக்தி மற்றும் பருப்பொருளின் அனைத்து வெளிப்பாடுகளையும் கட்டுப்படுத்தும் அதிநுட்பமான அதிர்வு எனும் எண்ணத்தினுடைய பூர்வாங்க படிவங்களின் ஒரு வெளிப்பாடு ஆகும். இறைவனால், முழு படைப்பும், முதலில் எண்ண அல்லது கருத்து வடிவில்தான் இருப்பில் கொண்டுவரப்பட்டது. பிறகு தெய்வீக உணர்வு நிலை, அந்த எண்ணப் படிவங்கள் ஒளி மற்றும் சக்தியாகச் சுருங்கவும் இறுதியில் ஸ்தூலப் பருப்பொருள் அதிர்வுகளாக மீண்டும் சுருங்கவும் விருப்புற்றது.

இறைவனது பிரதி பிம்பத்தில் படைக்கப் பட்டமனிதர்கள் என்ற வகையில் நாம் படைப்பின் கீழ்நிலை வடிவங்களில் இருந்து வேறுபட்டவர்கள்; நமக்கு எண்ணம் மற்றும் ஆற்றலின் இந்த அதே கருத்துக்களை பயன்படுத்தும் சுதந்திரம் பழக்க ரீதியாக நாம் அனுமதித்து செயற்படுத்தும் எண்ணங்கள் வாயிலாக நமது வாழ்க்கை வெளியாகும் சூழ்நிலைகளை நாம் உருவாக்குகிறோம்.

விஞ்ஞானப் பூர்வமான பிரார்த்தனை என்பது இந்த உண்மையின் புரிதல் மற்றும் உலகளாவிய படைப்பு சக்திகளின் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலானது; அது ஆரோக்கியம், இணக்கம் மற்றும் முழு நிறைவு ஆகியவற்றின் இறைவனது எண்ணப்படிவங்களுடன் இசைவித்துக்கொண்டு அதன் பிறகு இச்சா சக்தியை, அந்த எண்ணப்படிவங்களை உருவகப்படுத்த உதவ படைப்பு சக்திகளை வழிநடத்தப் பயன்படுத்துகிறது.

மனித மனத்தையும் இச்சா சக்தியையும் இறைவனது உணர்வு நிலை மற்றும் சித்தத்துடன் இசைவிக்க வழிகோலும் விஞ்ஞானம் தான் பிரார்த்தனையாகும். பிரார்த்தனை மூலம் நாம் இறைவனுடன் ஒரு அன்பான தனிப்பட்ட உறவை உண்டாக்குகிறோம். மேலும் இறைவனது மறுமொழியும் நிச்சயமானது.  பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதத்தில்

நாம் படிக்கிறோம்:”இறைவன் எல்லோருக்கும் பதிலளிக்கிறான் மற்றும் வேலை செய்கிறான். இறைவன் எத்தனை முறை மனிதர்களது பிரார்த்தனைகளுக்கு செவி மடுக்கிறான் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவன் ஒரு சிலருக்கு மட்டும் பாரபட்சமாக இல்லாமல் நம்பிக்கையுடன் அவரை அணுகும் ஒவ்வொருவருடைய பிரார்த்தனைக்கும் செவிமடுக்கிறான். அவனுடைய குழந்தைகள் சர்வவியாபக தங்கள் தந்தையின் மேல் முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும்”.

இறைவனின் எல்லையற்ற சக்தியின் பொறுமையான மற்றும் விடாப்பிடியான பயன்பாட்டின் மூலம், அவனது அன்பு மற்றும் உதவியுடன் நம்மால் நாம் விரும்பும் சூழ்நிலைகளையும் உருவாக்கவும் மற்றும் துன்பங்கள் மற்றும் வியாதியை அழிக்கவும் முடியும் – நமக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும்.

பிரார்த்தனையை பயனுள்ளதாக்க குறிப்புகள் மற்றும் உத்திகளை ஆராயுங்கள்.

குழந்தைகள் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இதைப் பகிர