வழிகாட்டுதலும் ஊக்கப்படுத்துதலும்

ஏற்கனவே வெளியிடப்பட்ட ஸ்ரீ தயா மாதா வழங்கிய சொற்பொழிவுகளின் தொகுப்புக்களை இங்கு  யோகதா சத்சங்க இதழ்களில் காணலாம்.ஶ்ரீ தயா மாதா, யோகதா சத்சங்க ஸொஸைடி/ ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் தலைவராகவும்  சங்க மாதா வாகவும் 1955 ல் பதவியேற்று, 2010ல் தாம் அமரத்துவம் அடையும் வரை அப்பொறுப்பினை வகித்தார்.

வரலாறு முழுவதும் மனித இனம் பல நெருக்கடிகளைக் கடந்து வந்திருக்கிறது. இந்த இக்கட்டான நிலைகள் தொடர்ந்து வரப்போக இருக்கின்றது. இந்த உலகம் மேல் நோக்கிய மற்றும் கீழ் நோக்கிய சுழற்சியில் தொடர்ந்து மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டு இருக்கிறது. இப்பொழுது வரை சமூகத்தின் ஒட்டு மொத்த உணர்வு என்பது மேல் நோக்கி முன்னேறியுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் அதன் உச்சத்தை அடைந்து பிறகு, அது மீண்டும் கீழ் நோக்கி வர இருக்கின்றது. முன்னேற்றம், பின்னடைவு என்ற நிலைகளில் நிலையான ஏற்றம், நிலையான ஓட்டம் போன்ற இருமை நிலைகள் உள்ளன.

இத்தகைய பரிணாமச் சுழற்சிகளால் நாகரீகங்கள் தோன்றி மறைந்தன. இந்தியா, சீனா போன்ற நாடுகளின் உயர்ந்த வளர்ச்சியடைந்த நாகரீகங்களை கருத்தில் எடுத்துக் கொள்வோம். இந்தியாவின் பண்டைய சமஸ்கிருத இதிகாசங்கள் மூலம் கிறித்துவ சகாப்தத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஶ்ரீ ராமர் காலத்தில், தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததை அற்புத விமானங்கள் மூலம் காண்கிறோம். மேலும் அந்தப் பொற்காலத்தில் வாழ்ந்தவர்களின் அறிவு வளர்ச்சியும் ஆன்மீக வளர்ச்சியும் உன்னதமாக இருந்தது. ஆனால் இறுதியாக நாகரீகம் வீழ்ச்சியடையத் துவங்கி, இருண்ட காலங்களில் இத்தகைய முன்னேற்றம் என்பது மறைக்கப்பட்டது. இதற்கு என்ன காரணம்? இதனை நேற்று எனது தியானத்திற்குப் பின் அக ஒளியில் இன்றைய உலகில் நடக்கும் நிகழ்வுகளை எண்ணத் தொடங்கினேன்.

இன்றைய நெருக்கடியின் தன்மை

சுழற்சியின் கீழ் நோக்கிய கால கட்டத்தில் பொதுவாக மனிதர்கள் ஆன்மீகத்தின் பக்கத்தை அதன் உன்னதமான தன்மை மறையும் வரை அறியாதிருப்பார்கள். எனவே அந்த நாகரீகத்தின் வீழ்ச்சி என்பது வெகு தொலைவில் இல்லை. இத்தகைய செயலாக்கம் சுழற்சியின் மேல் நோக்கிய காலகட்டத்தில் உள்ள நாடுகளுக்கும் ஏற்படுகின்றது. மனிதனின் தார்மீக மற்றும் ஆன்மீகப் பரிணாம வளர்ச்சியானது அவனது அறிவு மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இணையாக இல்லாவிடில் அவர் தாம் பெற்ற சக்தியைத் தவறாகப் பயன்படுத்தி தன்னைத் தானே அழித்துக் கொள்கிறார். உண்மையில் இதுவே இன்று நாம் எதிர்கொள்ளும் நெருக்கடியின் தன்மை எனலாம்.

மனிதனின் உணர்வுகள் அற்புத சக்தி வாய்ந்த அணுக்களின் புதிர்களைப் படிப்படியாக அறிந்து கொள்ள அவனுக்குப் போதுமான பரிணாமம் பெற்றுள்ளது. அந்த சக்தி ஒரு நாள் நமக்கு, இன்றும் கனவிலும் நினையாத மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால் அத்தகைய அறிவினை வைத்து நாம் என்ன செய்தோம்? அழிவிற்கான கருவிகளின் வளர்ச்சிகளிலேயே முதன்மையாகக் கவனம் செல்கின்றது. நவீன தொழில் நுட்பம் நமக்கு ஒரு காலத்தில் உடல் உயிர் வாழ்வதற்குத் தேவையான பலநேரத்தை விழுங்கும் பணிகளிலிருந்து விடுதலை அளித்திருக்கின்றது. பெரும்பாலும் மனிதன் இதனால் கிடைத்த ஓய்வு நேரத்தை அவனது மனம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் ஈடுபடுத்தவில்லை. ஆனால் முடிவற்ற பொருள் தேடுதல் மற்றும் புலன் இன்பங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறான். வெறுப்பு, பொறாமை, காமம் மற்றும் பேராசை ஆகிய உணர்ச்சிகளால் ஆளப்படும் மனிதன் தன் சொந்த உணர்வுகளின் அடிப்படையில் மட்டுமே சிந்தித்தால் தனி மனிதர்களுக்கிடையே ஒற்றுமையின்மை, சமூகங்களுக்குள் கொந்தளிப்பு மற்றும் நாடுகளுக்கிடையே மோதல்கள் ஏற்படுத்தவும் செய்கின்றான். போர்கள் என்பது ஒரு போதும் எதையும் குணப்படுத்தவில்லை. உண்மையில் அவை மிகப் பெரிய படுகொலையை உருவாக்கும் பனிப்பந்து போன்றதாகும். அறிவும் அன்பும் மிகுந்த மனிதர்களின் பரிணாம வளர்ச்சியால் மட்டுமே உலகம் உண்மையான உன்னத இடமாக உருவாகும்.

ஒளிக்கான ஓர் உறுதி

இன்றைய உலகில் அதிகமாகக் காணப்படும் நிராகரிப்பையும், இருளையும் எவ்வாறு சிறப்பாகச் சமாளிக்கமுடியும் என்று ஒருவர் என்னிடம் வினவினார். நான் அதைப் பற்றி ஆழ்ந்து பிரார்த்தனை செய்தேன். என் மனம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் மகாவதார் பாபாஜியின் குகைக்கு யாத்திரை சென்றபோது இந்தியாவில் எனக்குக் கிடைத்த தெய்வீக அனுபவத்திற்குத் திரும்பியது.

நானும் எனது குழுவினரும் குகைக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு சிறிய குடிசையில் அன்று இரவு தங்கினோம். நள்ளிரவில் எனது ஆழ்மனம் விழித்துக் கொண்டது. அதில் உலகம் பெரும் கொந்தளிப்பு, அமைதியின்மை மற்றும் குழப்பமான கால கட்டத்தை நோக்கிச் செல்கிறது என்று கண்டேன். நான் வாய்விட்டு அழுதேன். மற்றவர்கள் என்ன தவறு நேர்ந்தது என்று கேட்டார்கள். ஆனால் நான் அப்பொழுது எனக்கு நேர்ந்த அனுபவத்தை அவர்களுடன் பகிர விரும்பவில்லை. ஆனால் அந்த அனுபவம் தயாமாவுக்கு மட்டுமல்ல உலகிற்கே ஆழமான அர்த்தம் தரக்கூடியது என்பதை நான் அறிவேன். இந்த தரிசனத்தில் பிரபஞ்சத்தின் மீது ஒரு பெரிய கருமேகம் பரவியது. அதன் அச்சுறுத்தும் இருள் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது. ஆனால் அடுத்த நொடியில் மாபெரும் தெய்வீக அன்பு மற்றும் ஆனந்தமயமான ஒளி அந்த மேகங்களின் கருப்பு அலைகளைப் பின்னுக்குத் தள்ளுவதைக் கண்டேன். பின்னர் அனைத்தும் நன்றாகவே நடக்கும் என்பதை இறுதியாக அறிந்தேன்.

அந்த அனுபவத்தில் முன்னறிவிக்கப்பட்ட சிக்கலான காலங்களை நோக்கி நாம் இப்போது கடந்து கொண்டிருக்கிறோம். இதுபோல் ஒவ்வொரு நாட்டிலும் போர்கள், பஞ்சம், தீராத நோய்கள், பொருளியல் நெருக்கடி, எதிர்பாராத பேரழிவுகள், மத மற்றும் உள்நாட்டு மோதல்கள் நடைபெறுகிறது. எல்லாவற்றிலும் மோசமானது அதீத பயமும், உதவியற்ற குணமும் குழப்பத்தின் முகங்கள் வளர்ந்து வரும் போது அதிகரித்துக் காணப்படுவது தான். நம் மீது ஏன் இத்தகைய இன்னல்கள் பாய்கின்றன? தொன்மையான ஆவணங்களில் காணப்படுவது போல் தெய்வீக விருப்பத்தை மீறியதால் கொள்ளை நோய் மற்றும் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பண்டைய எகிப்தியர்களின் சூழ்நிலைக்கு நமது நிலை மாறுபட்டதல்ல.

இத்தகைய நிகழ்வுகள் விவிலிய காலங்களில் மட்டுமே நடைபெற்றன என நமக்கு நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அவ்வாறு இல்லை. இன்றும் பலருக்கு கொள்ளை நோய் காணப்படுகிறது. நாம் கண்மூடித்தனமாக இருப்பது, “ஓ இவையெல்லாம் நாம் மீறியதன் விளைவாக இருக்கமுடியாது. இது ஒரு தற்செயல் நிகழ்வு” என்று நினைக்கிறோம். இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல.

உலகளாவிய நியதியின் ஒரு பகுதியே நன்னடத்தை விதிகள்.

உங்களை நீங்களே, “நாம் உண்மையிலிருந்து எவ்வளவு தூரம் தொலைந்து போயிருக்கிறோம்?” என்று கேட்டுக் கொள்ளுங்கள்.”நீ கொலை செய்யாதிருப்பாயாக, நீ கூடா ஒழுக்கம் செய்யாதிருப்பாயாக,நீ களவு செய்யாதிருப்பாயாக,” போன்ற சத்திய விதிகள் கிறிஸ்துவின் போதனைகளிலும் மற்றும் அதற்கு முற்பட்ட பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவிலும் விவரிக்கப்பட்டுள்ளன. பதஞ்சலி யோகாவின், முதல் இரண்டு படிகளான யமம் மற்றும் நியமம் நாம் கடைபிடிக்க வேண்டிய நன்னடத்தைக் கொள்கைகள் பற்றியும் நாம் தவிர்க்க வேண்டிய தவறான நடத்தை விதிகளைப் பற்றியும் கூறுகின்றது.

இவை தெய்வீகச் சட்டங்கள் உலகளாவிய முழுமையின் ஒரு பகுதியாகும். அவை நம் அன்பிற்குரிய பரம் பொருளால் மனித குலத்திற்கு முன் வைக்கப்பட்டுள்ளன. அவர் இந்த உலகத்தை விஞ்ஞான பூர்வமாகவும், கணிதத் துல்லியமான முறையிலும் உருவாக்கினார். அதன் ஒவ்வொரு அம்சமும் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இயேசு மற்றும் பண்டைய இந்தியாவின் ரிஷிகள் போன்ற மகாத்மாக்களுக்கு வெளிப்படுத்துவதன் மூலம் தமது சட்டங்களை நமக்குத் தெளிவுபடுத்துகின்றார். நம்முடைய வாழ்க்கையைக் கடவுளோடு ஒத்துப் போகும் விதத்தில் எப்படி அமைத்துக் கொள்வது என்பதை அறிய உதவும் வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தச் சட்டங்களை முன் வைத்தார்.

பன்னெடுங்காலங்களுக்கு முன்பிருந்தே கடவுள் மீது அதீத பக்தி கொண்ட அன்பர்கள் தங்கள் தெய்வீகச் செய்திகளுடன் வந்தனர். ஆரம்ப காலங்களில் நாம் மோசஸால் விளக்கப்பட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தோம். உதாரணமாக “கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல்”. “நீங்கள் எதை விதைக்கின்றீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்” என்ற தெய்வீகச் சட்டத்தின் தவிர்க்க முடியாத தன்மையை அவர் சுட்டிக் காட்டினார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இயேசு கிறிஸ்து பெரிய கருணை என்னும் போதனையுடன் வந்தார். அக்கால கட்டத்தில் மனித குலம் மன்னிப்பு, இரக்கம் போன்றவை பற்றி சிறிதேனும் அறிந்து கொள்வது அவசியமாக இருந்தது. பல ஆண்டுகளாக கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற பழி வாங்கும் கொள்கைகள் மக்களிடமிருந்தன.
கிறிஸ்து சரியான சமநிலை ஏற்படுத்தும் முயற்சியில் மன்னிப்பு, பகிர்வு, தெய்வீக அன்பு போன்ற போதனை விதிகளை சமரசமின்றி வலியுறுத்தினார். அவரது செல்வாக்கு இன்று வரை தொடர்கின்றது.

இப்போது நாம் இன்னொரு சகாப்தத்திற்குள் நுழைந்துள்ளோம். ஒரு நேரத்தில் பரமஹம்சாஜி நமக்குக் கூறியதாவது. மகாவதார் பாபாஜி இயேசு கிறிஸ்துவுடன் ஒருங்கிணைந்த கால கட்டத்தில் மனித குலத்திற்கு இயேசுவின் போதனைகளைக் கேட்பது, பேசுவது மற்றும் இந்தியாவின் மிகச் சிறந்த புனித நூலான பகவத் கீதையை வாசிக்கவும் பாராயணம் செய்வதற்கும் அப்பாற்பட்டு அதன் மூலம் மனித குலத்தின் ஆழ்மனத் தேடல்களுக்கு வழி வகுத்தனர்.

நம்முள் எதோ ஒன்று தெய்வீக அன்போடு ஒருங்கிணைந்துள்ளது. நம்மில் யார் ஒருவரும் அந்த தெய்வீக விழிப்புணர்வுக்கு வெளியே இல்லை. நமது நிறம், குலம், நம்பிக்கை ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் அவருள் ஒரு பகுதியாக இருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் தீப்பொறியான தெய்வீக வேதங்கள் “நீங்கள் இறைவனின் கோயில் என்றும் பரம்பொருளின் ஆவி உங்களில் வசிக்கிறது என்பதையும் அறியாதவர்களா நீங்கள்” என்று சொல்கின்றன.

நமக்குள் இருக்கும் பரம்பொருளின் ஆவி என்றால் என்ன? அதுவே ஆன்மா என்கிற ஆத்மா. நாம் என்ன என்பதன் சாராம்சம். ஆனால் நம்மில் எத்தனை பேர் தெய்வீக ஆத்மாக்களாக அறிவோம். பெரும்பாலான மக்கள் அந்த உணர்விலிருந்து வெகுதூரம் விலகி ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் கூட இறை சிந்தனையற்று உள்ளார்கள். புலன்களின் துஷ்பிரயோகம் மூலம் அவர்களின் உணர்வு தடுமாறி விட்டது. மது, பேராசை போன்ற தவறான உணவுப் பழக்கத்தால் சுவை உணர்வு தேய்ந்து விட்டது. நம் அன்றாட வாழ்வில் நாம் காணும் சிற்றின்பத்தால் கண்கள் மங்கி விட்டன. நாம் கேட்கும் அனைத்து தீய விஷயங்களாலும் நம் செவிகள் சோர்ந்து விட்டன. இருண்ட எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தவறான வார்த்தைகளைப் பேசுவதால் அவர்கள் நாக்கு மந்தமாகி விட்டன.

உலகின் நிலையை உருவாக்குபவர் நாமே

நாமே நம்மை எதிர் கொள்ளும் நிலைமைகளை உருவாக்கியவர்கள். அவை ஒட்டு மொத்தமான ஒழுக்கக் கேடான நடத்தை மற்றும் வாழ்வின் அனைத்து நடைமுறைகளிலும் நெறிமுறைத் தரங்களின் சரிவு ஆகும். நாகரீகத் தொடர்ச்சி என்பது நன்னடத்தைத் தரங்களைக் கடைபிடிப்பதைப் பொறுத்துள்ளது.

மாறிவரும் காலத்திற்கு ஏற்ப மாறும் மனிதனால் உருவாக்கப்பட்ட குறியீடுகளைப் பற்றி நான் பேசவில்லை, ஆனால் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஊக்குவிக்கும் – ஒரு இணக்கமான ஒற்றுமையில் பன்முகத்தன்மையை அனுமதிக்கும் காலமற்ற உலகளாவிய நடத்தை கொள்கைகளைப் பற்றி பேசுகிறேன்.

சில நேரங்களில் கடவுளால் கட்டமைக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பின்னால் உள்ள மகத்துவமான உண்மையை நாம் சாதாரண உணர்வு நிலையிலிருந்து புரிந்து கொள்வது கடினமாகும். ஆனால் அந்த உச்ச உயர் மெய்ம்மை நிலைத்திருக்கிறது. மேலும் இறைவன் பிரபஞ்சத்தையும், அதன் உயிரினங்களையும் நிலை நிறுத்தும் துல்லியமான விதியை சமரசம் செய்ய முடியாது. பிரபஞ்சத்தில் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. மனிதர்களாகிய நாம் ஒருவரோடு ஒருவர் மட்டுமல்ல, இயற்கையுடனும் தொடர்புடையவர்கள். ஏனெனில் அனைத்து ஜீவராசிகளின் தோற்றமும் பரம்பொருள் என்ற ஒரே மூலத்திலிருந்து தான் தோன்றுகின்றன. அவரே சரியான நல்லிணக்கம். ஆனால் மனிதனின் தீய சிந்தனைகளும், செயல்களும் இந்த உலகில் அவரது இணக்கமான திட்டத்தின் செயல்பாட்டில் ஒரு மோசமான விளைவை ஏற்படுத்துகின்றது. நாம் வானொலி நிலையத்தின் விசையை திருப்பும் நிலையில், ஒலி வாங்கி நிகழ்ச்சியைத் தெளிவாகப் பெறுவதைத் தடுக்கலாம். எனவே மனிதனின் நிலையில் இழி நடத்தை இயற்கை சக்தியின் இணக்கத்தைச் சீர் குலைக்கிறது. இதன் விளைவாகப் போர்கள், இயற்கைப் பேரழிவுகள், சமூகக் கொந்தளிப்புகள் மற்றும் பிற பிரச்சினைகளை இன்று நாம் எதிர் கொள்கிறோம்.

"நிறைந்திருக்கும் கடவுளின் ஒளியும் மகிழ்ச்சியும்"

நாம் மாற வேண்டும். அதுவே பரமஹம்ஸ யோகானந்தரின் செய்தி. அதனால் தான் அவர் நிறுவிய இந்தப் பணியானது மேலும் மேலும் வளர்ச்சி பெறும். ஏனெனில் அது மட்டுமே மக்களிடையே மாற்றம் கொண்டு வர உதவும்.

பொதுவாகத் துன்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இறைவன் என்னை ஏன் துன்பப்படுத்துகிறார் என்று கூறுவது வழக்கம். ஆனால் அவர் நமக்கு அவ்வாறு செய்வதில்லை. நாம் செய்யும் செயல்களுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். நாம் ஒரு கற்சுவர் மீது மோதி அதனால் நம் தலையோ அல்லது முழங்கால்களோ உடைய நேரிட்டால் அந்தச் சுவர் நம்மைக் காயப்படுத்தியதாக நாம் பொருள் கொள்ள முடியாது. “எனக்கு அந்தச் சுவர் அங்கிருப்பது தெரியாது. இல்லையெனில் நான் அதில் இடித்துக் கொண்டிருக்க மாட்டேன்” என்று நாம் வருந்தலாம். அதற்காக சுவர் மீது நாம் குற்றம் சுமத்த இயலாது. எனவே தான் இறைவன் தெய்வீகச் சட்டங்களை உருவாக்கி அவற்றை உலகின் அனைத்து பெரிய மதங்களுக்கும் வழிகாட்டுதல்களாக வைத்தார். நம் ஒவ்வொருவருக்கும் அவர் கூறுவதாவது “என் குழந்தைகளே இவையே நீக்கள் பின்பற்றப்பட வேண்டிய அறுதியான கொள்கைகள்”. நாம் பலவீனமானவர்கள் மற்றும் சோர்வானவர்கள் என்பது அவருக்குத் தெரியும். இந்த பொருள் உலகில் நாம் அதிகமாக மூழ்கிவிட்டதால் அவருடனான தொடர்பை நாம் இழந்ததுடன், நம் பார்வை மற்றும் பாகுபடுத்திக் பார்க்கும் தன்மையும் மங்கி விட்டது என்பதையும் அவர் அறிவார். ஆகவே நாம் எப்போது தவறு செய்கிறோம் என்பதை உணர்த்தி, நமக்கு உதவ தீர்க்கதரிசிகள் மற்றும் ரிஷிகள் மூலம் இத்தகைய சட்டங்களைக் கொடுத்தார். அந்த சாசுவத நித்திய தெய்வீகக் கொள்கைகளை நாம் மீறும் போது கஷ்டப்படுகிறோம்.

நாம் அவர்களிடம் திரும்பிச் செல்ல வேண்டும். கிறிஸ்து சொன்னது போல் இந்த உலகம் நமக்கான இராஜ்ஜியமல்ல என்பதை நாம் உணர வேண்டும். நம் ராஜ்யம் இந்த சாதாரண உலகிற்கு அப்பாற்பட்டது. அங்கேதான் தெய்வீகமானவர்களும், பெரிய மகான்களும், குருமார்களும் வசிக்கின்றனர். நான் எத்தனையோ முறை பரமஹம்ஸர் தமது அறையில் திடீரென்று அமைதி கொள்வதையும், எல்லாவற்றிலிருந்தும் விலகி இருப்பதையும் பார்த்திருக்கின்றேன். அந்த சமயங்களில் நம்மில் சிலர் அவர் காலடியில் அமர்ந்து அவருடன் தியானம் செய்யும் பாக்கியத்தையும் பெற்றோம். அவர் தம் கண்களைத் திறந்த பின்னர் அந்த மற்ற உலகத்தைப் பற்றிப் பேசுவார். “இந்த வரையறுக்கப்பட்ட உலகை நீங்கள் பார்க்கின்றீர்களா?. அது மிகவும் நிலையற்றது. நான் காண்பது போல் இந்த உலகிற்கு அப்பாற்பட்ட அந்த உன்னத உலகை நீங்கள் காண முடிந்தால் ஒளியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் “.

என் அன்பர்களே, உங்கள் ராஜ்ஜியமும் இவ்வுலகைச் சார்ந்தது அல்ல. நமது உண்மையான ராஜ்ஜியத்தைப் பற்றிய நமது விழிப்புணர்வை இழந்துவிடக் கூடாது; இந்த உலகத்தின் விஷயங்களில் நம் நேரத்தையும் கவனத்தையும் செலவிட வேண்டாம், ஏனென்றால் ஒரு நாள் நாம் அதை விட்டு வெளியேற வேண்டும்.

அழிவையும், இருளையும் ஏற்காதீர்கள்

நீங்கள் என்னிடம் “அழிவையும், இருளையும் நாம் எப்படி எதிர் கொள்வது” என்று வினவினால், நான் உங்களுக்குச் சொல்கின்றேன். ஏற்றுக் கொள்ளாதீர்கள்!. நீங்கள் உங்கள் சொந்த உணர்வு நிலையில் இருளை அனுமதிக்காத வரையில் இருள் நீடித்திருக்க முடியாது. உங்கள் விழிப்புணர்வு மையத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் நாம் எத்தனை முறை இறைவனைப் பற்றி சிந்திக்கிறோம்?. எத்தனை முறை நாம் உள் நோக்கி இறைவனிடம் திரும்புகின்றோம்?. அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உணர்ந்து, “நான் உன்னை நேசிக்கின்றேன். என் இறைவா” என்று எந்நேரமும் அந்த சிந்தனையில் வாழ்வது மிகவும் அற்புதமானது. அது என்ன ஒரு பேரானந்தம். “நான் உன்னை நேசிக்கின்றேன். ஏனெனில் நான் உன்னை முதலில் நேசிப்பதால் நான் எல்லா மனித குலத்தையும் நேசிப்பதை உணர்கின்றேன். நான் உன்னை நேசிப்பதால் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டவர்களைக் கூட என்னால் மன்னிக்க முடிகிறது. நான் உன்னை நேசிப்பதால் இந்த உலகில் நல்லது மட்டுமே செய்ய விரும்புகின்றேன்”. இந்த வழியில் தான் நாம் நம் வாழ்க்கையை வாழ வேண்டும்.

இந்த “அழிவு மற்றும் இருளில்” நீங்கள் ஊக்கம் இழக்காதீர்கள். அதுவும் கடந்து போகும். இந்த உலகில் பல நாகரீகங்கள் தோன்றி மறைந்தன. இன்று நாம் காண்பதுபோல் எண்ணற்ற நெருக்கடிகள் அன்றும் இருந்தன. ஒரு வேளை நாம் அறிந்த அல்லது நினைவு கூர்தலை விட அதிக அளவு நம் ஆன்மாக்கள் அவதாரங்களின் நீண்ட பயணத்தின் போதும் இது போன்ற காலங்கள் தோறும் பயணித்து வந்துள்ளன. ஆனால் இது மட்டுமே அனைத்தும் அடங்கியதல்ல. இதற்கு அப்பாற்பட்ட சிறப்பான அனுபவங்கள் நமக்கு வேற்று உலகில் இருக்கிறது. இந்த கோளத்துடனான உடல் பிணைப்புகளிலிருந்து எவ்வளவு தூரம் நம் மனத்தை விலக்கி செல்கிறோமோ அதைவிட விரைவாக நம் உணர்வை அந்த தெய்வீக ராஜ்ஜியத்தை நோக்கி உயர்த்த முடியும்.

நம் புலன்களை ஆன்மீக மயமாக்கும் முயற்சிகளை தொடங்குவோம். நல்லதை மட்டுமே பார்த்து நல்லதை சிந்திக்க முயற்சிப்போம். அதனால் நாம் குருட்டு நம்பிக்கைக்கு ஆளாகிறோம் என்று அர்த்தமல்ல; நமக்குள் மன உறுதி பக்தி மற்றும் நம்பிக்கை என்ற அர்த்தத்துடன் கூறலாம், “என் இறைவா நான் உன்னுடையவன். என்னால் முடிந்ததை எதையும் உலகின் மிகச் சிறிய மூலையிலிருந்து கொண்டு மற்றவரை உற்சாகப்படுத்தவும், உயர்த்தவும் செய்வேன். அது என் குடும்பமோ எனது அண்டை வீட்டாரோ என் சமூகத்தினரோ யாரை என்னால் அணுக முடிகிறதோ அவர்களுக்கு நான் கஷ்டப்பட்டேனும் என்னால் முடிந்ததைச் செய்வேன்”.

எனது குருதேவர் அடிக்கடி கூறுவார், “உண்மையான சன்னியாசிகள் என்பவர்கள் தங்கள் சொந்த இன்னல்களுக்கு இடையேயும், தங்களை நாடி வரும் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் குணப்படுத்தலையும் ஏற்படுத்துவார்கள்”. அது தான் இறைவனை நேசிக்கும் உண்மையான பக்தனின் அணுகுமுறை. ஆணோ பெண்ணோ யாராக இருப்பினும் இம்மாதிரியான சன்னியாசிகளை நாடி வரும் போது அந்தத் தனி நபர் எவரும் தாழ்த்தப்பட்டோ, ஊக்கமில்லாமலோ, தோல்வியுற்றோ திரும்பமாட்டார்கள். நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள். மேலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்வில் ஏற்படும் துயரங்களை வெல்லும் சக்தி உள்ளது. அதற்கு நாம் அதன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும. அதனை நாம் செயல்படுத்துவோம். நாம் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
பரமஹம்சாஜி மேற்கோள் காட்டினார். சோகமாக இருக்கும் ஒரு சன்னியாசி”ஒரு சோகமான சன்னியாசியாவார்”. பரமஹம்சாஜி எல்லா நேரத்திலும் தன்னுள் மகிழ்ச்சியாக இருந்தார். யோகதா சத்சங்க சொஸைடி / ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் இந்தப் பணிகளை உருவாக்க அவர் மேற்கொண்ட போராட்டங்களுக்கு மத்தியில் இறைவனுக்கு சேவை செய்வது எளிதல்ல. இந்த உலகில் வாழ்க்கை எளிதானது அல்ல. ஆனால் நாம் மகிழ்ச்சியுடனும் ஆனந்தத்துடனும் எதையும் நாம் வெல்வோம் என்ற உறுதியுடன் வாழவேண்டும். ஏனென்றால் இறைவன் நமக்குத் துணை நிற்கின்றார்.

நீங்கள் எப்போதும் மனச்சோர்வு கொண்ட மனிதராயிருக்காதீர்கள். எதிர்மறை சிந்தனையைப் பரப்பும் ஒருவராக இருக்காதீர்கள். நினைவில் கொள்ளுங்கள் இந்த உலகம் இரட்டைநிலை கொண்ட சட்டங்களால் உருவாக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் இரு பக்கங்கள் உள்ளன. நேர்மறை மற்றும் எதிர்மறை- இதில் ஒவ்வொரு மனிதனும் தனது உள்ளுணர்வை ஏதாவது ஒன்றுடன் ஒருங்கிணைக்கும் வாய்ப்பினைப் பெறுகிறார். துர்நாற்றம் வீசும் செடிகளைச் சுற்றி இருக்க எவரும் விரும்புவதில்லை. அது நமக்கு எதிர்மறையான தாக்கத்தையும் மனச் சோர்வையும் உண்டாக்கி விடும். நமகு குருதேவர் சொல்வதைப் போல் எல்லோரும் இனிமையான மணம் தரும் ரோஜாச் செடிகளைச் சுற்றியே இருக்க விரும்புகின்றனர். நாம் நேர்மறையான மனம் கொண்ட மனித ரோஜாக்களாக இருப்போம்.

நம் மனம் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருக்க நேர்மறை எண்ணங்களைக் கொண்டு கட்டமைப்போம்: இது போல் நாம் செய்தால் நன்மைகள் நம்மைத் தேடி வரும் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். எண்ணங்களுக்கு ஈர்க்கும் சக்தி உண்டு. நம் எண்ணங்கள் வழக்கமாக எதிர்மறையாக இருக்குமானால் நாம் எதிர்மறையான சூழ்நிலைகளை ஈர்க்கிறோம். நாம் நேர்மறையாக சிந்தித்து வாழ்ந்தால் நம்மால் நேர்மறை விளைவுகளை ஈர்க்க முடியும். இது மிகவும் எளிது. விரும்பத்தக்கது. விரும்பத்தக்கதையே ஈர்க்கும்.

உலகை மாற்றும் பிரார்த்தனை சக்தி.

நான் விவரித்த அந்தப் பார்வையின் முடிவில் நம் உலகை அச்சுறுத்தும் இருள், ஆன்மீகக் கோட்பாடுகளின்றி வாழும் தனி நபர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் கடவுளின் ஆன்மாவால் வெளியேற்றப்படுகிறது. ஒழுக்கமே ஆன்மீக வளர்ச்சியின் தொடக்கம். பொதுவான சரியான நடத்தை விதிகளான – உண்மை, சுயகட்டுப்பாடு திருமண உறுதிமொழிகளுக்கு விசுவாசம், மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தாமை ஆகியன ஒவ்வொரு மதத்திலும் காணப்படுகின்றன. மேலும் நாம் நடத்தையை மட்டுமல்ல சிந்தனையையும் நேராக்க வேண்டும். நாம் ஒரு குறிப்பிட்ட வழியில் தொடர்ந்து சிந்தித்தால், அந்த எண்ணங்கள் இறுதியில் செயல்களாக மாறும்.

சிந்தனை ஒரு சக்தி: அது மகத்தான சக்தி கொண்டுள்ளது. எனவே தான் பரமஹம்ஸ யோகானந்தர் தொடங்கிய உலகளாவிய பிரார்த்தனைக் குழுவை மிகவும் ஆழமாக நம்புகின்றேன். நீங்கள் அனைவரும் அதில் ஈடுபட்டுள்ளீர்கள் என நம்புகின்றேன். உலகளாவிய பிரார்த்தனைக் குழுவில் பயன்படுத்தும் உத்தி போல் மக்கள் அமைதி, அன்பு, நல்லெண்ணம், மன்னிப்பு போன்ற நேர்மறை எண்ணங்களை அனுப்பும் போது அது ஒரு சிறந்த சக்தியை உருவாக்குகிறது. மக்கள் இதைச் செய்தால் அது உலகை மாற்றும் அளவிற்குச் சக்தி வாய்ந்த நற்குணங்களின் அதிர்வுகளை ஏற்படுத்தும்.

நீங்கள் மாறுங்கள் நீங்கள் ஆயிரக்கணக்கானோரை மாற்றுவீர்கள்

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் இறைவனுடன் இணக்கமாகச் செய்வதே நமது கடமையாகும். அதாவது நம் எண்ணம், சொல் மற்றும் நமது முன்மாதிரியான நடத்தை மூலம் உலகின் பிற பகுதிகளிலும் நாம் சென்று ஆன்மீகத் தாக்கத்தை உண்டாக்க முடியும், ஒருவரது போதனைகள் அவர் தம் வாழ்வில் செயல்படுத்தும் வரை அவை சிறிய அர்த்தம் கொண்டதாகவே இருக்கும். கிறிஸ்துவின் போதனைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே இன்றும் சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன. ஏனென்றால் அவர் தாம் கற்பித்ததைப் போல் வாழ்ந்தார். நாம் நம்பும் கொள்கைகள் நம் வாழ்வில் அமைதியாக ஆனால் சொல்லும் கருத்துக்களை வெளிப்படையாகப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். நமது குருதேவர், “உங்களைச் சீர்திருத்துங்கள் நீங்கள் ஆயிரக்கணக்கானோரை சீர்படுத்துவீர்கள்” என்று அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.

நீங்கள் சொல்லலாம், “ஆனால் உலகில் நிறைய திருத்த வேண்டியிருக்கிறது; செய்ய வேண்டியது அதிகம்.” ஆம், தேவைகள் வலிமையானவை; ஆனால் நாம் வெளியில் உள்ளவற்றை சரி செய்ய முயற்சிப்பதால் மட்டும் உலகின் பிரச்சனைகள் நீங்காது. இந்த பிரச்சனைகளுக்கு உண்மையான காரணமான மனிதனுடைய ஆக்கக் கூறு பகுதியை நாம் சரி செய்ய வேண்டும், அதனை நம்மிலிருந்து நாமே தொடங்க வேண்டும்.

புகைபிடிக்க வேண்டாம் என்று ஒரு நபரை நீங்கள் ஆயிரம் முறை சொல்லலாம், ஆனால் அவர் சிகரெட்டை விரும்ப முடிவு செய்திருந்தால், நீங்கள் சொல்லும் எதுவும் அவரது பழக்கத்தை மாற்றப்போவதில்லை. அவர் இருமல் மற்றும் புகைப்பழக்கத்தின் எதிர்மறையான விளைவுகளை அனுபவிக்கத் தொடங்கும் போது மட்டுமே அது அவரைத் தாக்கும் போது, அவர் உணர்ந்தார், “இது என்னைப் பாதிக்கிறது; இப்போது நான் சிறிது யோசிக்க வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. ” அதேபோல், உங்கள் சொற்களுக்கு மட்டும் ஒரு இணக்கமற்ற நபரைச் அமைதியாக இருக்கச் செய்யும் செல்வாக்கு செலுத்தும் ஆற்றல் குறைவாக இருக்கலாம். ஆனால் அந்த நபர் உங்கள் சொந்த அமைதியான இயல்பிலிருந்து நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வு உணர்வை உணர்ந்தால், அது உறுதியான ஒன்று; அது அவருக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்கள் ஆத்மாவுடனும் மற்றும் இறைவனுடனும் ஒரு அக இணக்கத்தை நிலைநிறுத்துங்கள்.

அனைவராலும் அவசரமாக தேடப்படும் அமைதியும் நல்லிணக்கமும் பொருள் சார்ந்த விஷயங்களிலிருந்தோ அல்லது வெளி அனுபவத்திலிருந்தோ பெற முடியாது; அது சாத்தியமில்லை. ஒரு அழகான சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதன் மூலமோ அல்லது மலைகளுக்கோ அல்லது கடலோரத்திற்குச் செல்வதன் மூலமோ நீங்கள் ஒரு தற்காலிக அமைதியை உணரலாம். ஆனால் உங்கள் சொந்த இருப்பில் நீங்கள் இணக்கமற்றவராக இருந்தால் மிகவும் ஊக்கமளிக்கும் அமைப்பு கூட உங்களுக்கு அமைதியைத் தராது.

உங்கள் வாழ்க்கையின் வெளிப்புற சூழ்நிலைகளில் நல்லிணக்கத்தை கொண்டுவருவதற்கான ரகசியம் உங்கள் ஆன்மாவுடனும் இறைவனுடனும் அக இணக்கத்தை ஏற்படுத்துவதாகும்.

அந்த நிலைக்கு மனிதகுலம் அதிகம் பாடுபடுவதால், நம் உலகை அச்சுறுத்தும் நெருக்கடிகள் குறையும். ஆனால் இந்த பூமி ஒருபோதும் சரியானதாக இருக்காது என்பதை நாம் உணர வேண்டும், ஏனென்றால் இது நமது நிரந்தர வீடு அல்ல; இது ஒரு பள்ளி, அதன் மாணவர்கள் பல்வேறு தரக் கற்றலில் உள்ளனர். வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களையும், நன்மை மற்றும் துயரங்களை அனுபவிக்கவும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், நாம் இங்கு வந்துள்ளோம்.

இறைவன் நித்தியமானவர், நாமும் அப்படித்தான். அவரது பிரபஞ்சம் அதன் ஏற்ற தாழ்வுகளில் தொடர்ந்து செல்லும். அவருடைய படைப்பு விதிகளுக்கு இணங்க நாம் நம்மை அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்பவர்கள் தங்கள் வெளிப்புற சூழ்நிலைகள் அல்லது அவர்கள் பிறந்த குறிப்பிட்ட உலக சுழற்சியைப் பொருட்படுத்தாமல் மேல்நோக்கி பரிணாமம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்; மற்றும் அவர்களின் நனவின் சுத்திகரிப்பு மூலம், அவர்கள் இறைவனில் சுதந்திரத்தைக் காண்கிறார்கள்.

இறுதி அர்த்தத்தில், நம் ஒவ்வொருவரின் முக்தியும் முற்றிலும் நம்மில் உள்ளது – நாம் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறோம்; நாம் எப்படி நடந்துகொள்கிறோம்; நாம் நம் வாழ்க்கையை நேர்மையாக, விசுவாசமாக, மற்றவர்களை மதித்து, எல்லாவற்றிற்கும் மேலாக தைரியம், நம்பிக்கை, இறைவன் மீது நம்பிக்கை வைத்து நடத்தினாலும், நாம் இறைவனின் மீதான அன்பில் கவனம் செலுத்தினால் அது எளிமையாகிறது. நாம் நல்லதைச் செய்ய விரும்புவோம், நல்லவர்களாக இருக்க விரும்புகிறோம். ஏனென்றால் நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த அமைதியையும் ஞானத்தையும் மகிழ்ச்சியையும் நம் நனவில் ஊறுவதை நாம் காண்கிறோம்.

பரமஹம்ஸர் நம்முடைய வாழ்க்கையை, இறை ஆனந்தத்தில் வாழ வேண்டும் என்று நம்மிடம் எத்தனை முறை கூறியுள்ளார்?:

மகிழ்ச்சியிலிருந்து நான் வந்தேன். மகிழ்ச்சியில் நான் வாழ்கிறேன், நகர்கிறேன், என் இருப்பைக் கொண்டிருக்கிறேன். அந்தப் புனித மகிழ்ச்சியில் நான் மீண்டும் உருகுவேன்.

இந்த உண்மையைப் பிடித்துக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் என்ன வந்தாலும் அந்த மகிழ்ச்சி உங்களை உள்ளுக்குள் எப்படித் தாங்குகிறது என்பதை நீங்கள் காண்பீர்கள். இந்த மாயையான உலகில் மாறிக்கொண்டிருக்கும் நிகழ்வுகளை விட அந்த மகிழ்ச்சி உங்களுக்கு அதிக உண்மையாகிறது.

இதைப் பகிர