எங்கும் நிறைந்த கிறிஸ்துவிற்காக ஒரு தொட்டில்

அருளியவர்: பரமஹம்ஸ யோகானந்தர்

வருகின்ற இந்தக் கிறிஸ்துமஸ் நாட்களின் போது, கிறிஸ்து-சர்வவியாபகம் உங்கள் உணர்வுநிலையினுள் புதிதாக வர முடியும் படி உன்னத பக்தியின் ஒரு புதிய வாயிலைத் திறவுங்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு பொன்னான விநாடியும், கிறிஸ்து உங்களுடைய அறியாமை எனும் இருண்ட வாயில்களைத் தட்டிக் கொண்டிருக்கிறார். இப்போது, இந்தக் கம்பீரமான புனித வைகறையில், கிறிஸ்து குறிப்பாக உங்களுடைய அக அழைப்பிற்குப் பதிலளிக்க, உங்களுள் தன்னுடைய கிறிஸ்து உணர்வுநிலை சர்வவியாபகத்தை விழித்தெழச் செய்ய வந்து கொண்டிருக்கிறார்.
மென்மையான அக உணர்வுகள் எனும் ஒரு தொட்டிலை உங்களுடைய தியானம் எனும் நூல்களால் நெய்து அதன் வரவேற்கும் எல்லையற்ற பரப்பினுள் குழந்தை முடிவிலியைத் தாங்கப் போதுமான அளவு இடவசதி கொண்டதாக அதை ஆக்குங்கள். கிறிஸ்து பசுமைவண்ணப் புற்களில் பிறந்தார்; அவருடைய மென்மை எல்லா நறுமணங்களிலும் தவழ்ந்தது. பால் நுரைவண்ணக் கடலால்-அலங்கரிக்கப்பட்ட உலகம், மின்மினுக்கும் நட்சத்திரங்கள் பதித்த நீலவண்ண ஆடை, தன்னையே கொடுக்கும் தியாகிகள், மகான்கள் ஆகியோரின் செந்நிற அன்பு, ஆகியவை எல்லாம்-ஊடுறுவும் குழந்தை கிறிஸ்துவிற்காக ஒரு உறைவிடத்தை வழங்குவதில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டன.
இந்த எங்கும்-நிறைந்த கிறிஸ்து முடிவற்றவனின் மார்பகத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார்; அவர் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், குறிப்பாக உண்மையான பாசக் கதகதப்பில் புதிய பிறவியை எடுக்க விழைகிறார். எல்லையற்ற கிறிஸ்து ஒவ்வொரு வான்வெளித் துகளிலும் என்றும் புதிய ஞானத்தின் மற்றும் படைப்புத்திறன் மிக்க வெளிப்பாட்டின் மகிமையாக இருந்த போதிலும், உங்களுடைய இடைவிடாத பக்தி எனும் தொட்டிலில் காணப்படுவதை அவர் விரும்பாவிட்டால் உங்களால் ஒருபோதும் அவரைக் காண முடியாது.
உங்கள் இதயமெனும் சொகுசான தொட்டில் நீண்ட நெடுங்காலமாக, சுய-அன்பை மட்டுமே ஏந்திக் கொண்டவாறு, சிறியதாக இருந்து வருகிறது; இப்போது அங்கே சமூக, தேசீய, சர்வதேச, உயிரினம் சார்ந்த, மற்றும் பேரண்ட கிறிஸ்து-அன்பு பிறந்து ஒரே பேரன்பாக ஆகும் படியாக, நீங்கள் அதை மாபெரும் அளவிலானதாகச் செய்ய வேண்டும்.
கிறிஸ்துமஸ் பொருத்தமான விழாக்களால் மற்றும் பொருள்சார் பரிசுகளின் பரிமாற்றத்தால் மட்டுமே அல்லாமல், உங்கள் உணர்வுநிலையை கிறிஸ்துவிற்கான ஒரு பேரண்டத் தேவாலயமாக ஆக்கியவாறு, ஆழ்ந்த, தொடர்ச்சியான தியானத்தாலும் கொண்டாடப்பட வேண்டும். அங்கே நீங்கள் உங்களுடைய அன்பு, நல்லெண்ணம், உங்களுடைய இணக்கமற்ற, அத்துடன் உங்களுடைய இணக்கமான சகோதரர்களை உடல்ரீதியாக, மனரீதியாக மற்றும் ஆன்மீகரீதியாக உயர்த்தும் சேவை ஆகிய மிகவும் விலைமதிப்பில்லாப் பரிசுகளை வழங்க வேண்டும்.
எல்லையற்ற கிறிஸ்து எங்கும் இருக்கிறார்; அவருடைய பிறப்பை இந்து, பௌத்த, கிறிஸ்துவ, இஸ்லாமிய, யூத, மற்றும் பிற உண்மையான சமய ஆலயங்களில் வழிபடுங்கள். பேருண்மையின் ஒவ்வொரு வெளிப்பாடும் எல்லாம்-ஊடுறுவும் கிறிஸ்து உணர்விலிருந்து பாய்கிறது, ஆகவே அந்தப் புனிதமான பிரஞ்ச மகா அறிவாற்றலை ஒவ்வொரு தூய்மையான மதத்திலும், நம்பிக்கையிலும், மற்றும் போதனையிலும் வழிபடக் கற்றுக் கொள்ளுங்கள். பேரண்ட மகா கிறிஸ்து மனிதன் எனும் தெய்வீக இருப்பைக் கனவுகண்டு உருவாக்கியதால், நீங்கள் கிறிஸ்துவின் பிறப்பை உங்களுடைய புதியதாக விழித்தெழச் செய்யப்பட்ட ஒவ்வொரு தேசீயத்திற்கும் இனத்திற்கும் ஆன சமமான அன்பில் கொண்டாட வேண்டும்.
எல்லாப் புதிதாக மலர்ந்த மலர்களும் சூட்சும மினுமினுப்புகளும் எல்லையற்ற கிறிஸ்துவின் பிரதிபிம்பங்கள் ஆகும்; ஒவ்வொன்றையும் உங்கள் அன்பால் மாலையிடுங்கள். உங்களுடைய அன்பில் உங்களுடைய பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார் ஆகியோருக்கான மற்றும் எல்லா இனங்களுக்காகவும் ஆன ஓர் உன்மத்தமான கிறிஸ்து-அன்பைக் காணுங்கள். உங்கள் ஆன்மா எனும் சரணாலயத்தில் , உங்களுடைய அமைதியற்ற எண்ணங்களை, திரட்டி கிறிஸ்துவிற்கான மிகவும் ஆழ்ந்த ஐக்கியமான அன்பின் ஒரு சேவையில் அவற்றை அசைவற்று நிலைப்படுத்த, வரவழையுங்கள்.
கிறிஸ்துமஸ் பரிசுப் பெட்டிகள் குடும்ப மரத்தைச் சுற்றி வைக்கப்படும் போது, ஒவ்வொரு சிந்தனையையும் கிறிஸ்துவின் வழிபாட்டுப் பீடமாக ஆக்குங்கள், மற்றும் பரிசுகளை உங்கள் நல்லெண்ணாத்தால் செறிவூட்டுங்கள். கிறிஸ்துவை எல்லாப் படைப்பிலும் பிறந்ததாக வழிபடுங்கள்: நட்சத்திரத்தில், இலையில், மலரில், வானம்பாடியில், பூச்செண்டில், மற்றும் உங்களுடைய பூம்பட்டுப் பக்தியில். உங்களுடைய இதயத்தை, கிறிஸ்து அங்கே பிறந்து என்றென்றைக்குமாக இருக்கும் படியாக, எல்லா இதயங்களுடனும் ஒன்றிணையுங்கள்.

(பரமஹம்ஸ யோகானந்தரின்  தி செகன்ட் கமிங் ஆஃப் கிறைஸ்ட்: தி ரிசரெக்ஷன் ஆஃப் தி கிறைஸ்ட்  விதின் யு  என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்.

இதைப் பகிர