ஓர் ஆன்மீக அடித்தளம்

யோகானந்தரின் எழுத்துக்கள்.

வருங்கால சந்ததியினருக்கு தனது செய்தியைக் கொண்டுசெல்லும் நூல்களை எழுதுவதற்குத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-இன் ஆன்மீக மற்றும் மனிதகுலச் சேவைக்கு நீடித்த அடித்தளத்தை உருவாக்கவும், 1930-களில் பரமஹம்ஸ யோகானந்தர் நாடு முழுவதும் ஆற்றி வந்த பொதுச் சொற்பொழிவுகளிலிருந்து ஓரளவு விலகத் தொடங்கினார்.

அவரது வழிகாட்டுதலின் கீழ், அவர் தனது வகுப்பு மாணவர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அறிவுரையும் போதனையும் வீட்டிலிருந்தே கற்பதற்கான யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா பாடங்கள் என்ற விரிவான தொடராக தொகுக்கப்பட்டன.

என்சினிடாஸில் யோகானந்தர்.

கலிஃபோர்னியா, என்சினிடஸ்-ல் பசிஃபிக் பெருங்கடலை மேலிருந்து நோக்கியவாறு ஓர் அழகான ஆசிரமம், குருவிற்காக, அவர் இந்தியாவில் இருந்தபொழுது, அவரது அன்பு சீடரான ஸ்ரீ ஸ்ரீ ராஜரிஷி ஜனகானந்தரால் கட்டப்பட்டது. இங்கே குரு தனது சுயசரிதம் மற்றும் பிற நூல்களுக்கான பணியில் பல ஆண்டுகளைக் கழித்தார், மேலும் இன்றுவரை தொடரும் ஏகாந்தவாச நிகழ்ச்சிளைத் தொடங்கினார்.

அவர் பல ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் ஆலயங்களையும் (என்சினிடஸ், ஹாலிவுட் மற்றும் சான்டியாகோ) நிறுவினார், அங்கு எஸ் ஆர் எஃப் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களான ஈடுபாடுள்ள அவையினரிடம் பெருமளவு வரிசைமுறையிலான ஆன்மீக விஷயங்களைப் பற்றி வழக்கமாகப் பேசினார். ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவால் சுருக்கெழுத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த உரைகளில் பல, ஒய் எஸ் எஸ்/எஸ்ஆர்எஃப்-பினால் “யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு” என்று மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது மற்றும் யோகதா சத்சங்க சஞசிகையிலும் வெளியிடப்படுகிறது.

ஒரு யோகியின் சுயசரிதை புத்தகத்தின் மேல் யோகானந்தரின் புகைப்படம்

யோகானந்தரின் வாழ்க்கை வரலாறு, ஒரு யோகியின் சுயசரிதம், 1946-ல் வெளியிடப்பட்டது (மேலும் அடுத்தடுத்த பதிப்புகளில் அவரால் குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்தப்பட்டது). நிரந்தரமாக மிக அதிக விற்பனையாகும் இப்புத்தகம் முதன்முதலில் வெளியிடப்பட்டதிலிருந்து தொடர்ச்சியான வெளியீட்டில் உள்ளது மற்றும் 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு நவீன ஆன்மீக இலக்கியமாக பரவலாகக் கருதப்படுகிறது.

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது சீடர்கள் ஏரி ஆலயத்தில் உள்ளனர்.

1950-ம் ஆண்டில், பரமஹம்ஸர் லாஸ் ஏஞ்ஜலீஸ்-ல் உள்ள ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-பின் சர்வதேச தலைமையகத்தில் அதன் முதல் உலக மாநாட்டை நடத்தினார் — இந்த ஒரு வாரகால நிகழ்வு, இன்று ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானவர்களை ஈர்க்கிறது. பசிபிக் பாலிசேட்ஸ்-ல், பத்து-ஏக்கர்-ஏரிப் பரப்பு கொண்ட தியானத் தோட்டங்களில் மகாத்மா காந்தியின் அஸ்தியின் ஒரு பகுதியை கோயில் கொண்டுள்ள அழகான எஸ்.ஆர்.எஃப் ஏரிக் கோவிலையும் (Lake Shrine) அவர் அர்ப்பணித்தார். அப்பொழுதிருந்தே அது கலிஃபோர்னியா-வின் மிக முக்கியமான ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாகிவிட்டது.

இதைப் பகிர