கல்வியாளர்கள் & அறிவியல் சமுதாயம்

"யோகானந்தர் அமெரிக்கர்களுக்கு இந்து மதத்தின் பொருள்-விளக்குபராக படித்தரத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பார். அறிஞர்களிடையே கூட அவர் மிகவும் மதிக்கப்பட்டார்.

— —டெட் சாலமன், மத ஆய்வுகளின் பேராசிரியர், அயோவா மாநில பல்கலைக்கழகம் (ஓய்வு) மற்றும் டிரேக் பல்கலைக்கழகம்

"யோகானந்தர் இறை-நிறைந்த தீர்க்கதரிசி மற்றும் மகான், தத்துவஞானி மற்றும் இறுதியான மாபெரும் மெய்ம்மையின் எண்ணற்ற அம்சங்களை அனுபவித்த கவிஞர்....ஆன்மீக இருப்பின் ரகசியங்களில் பெரும்பாலான மனிதர்களை விட அதிகமாக ஊடுருவிய ஒரு அரிய மேதை."

— ரேமண்ட் பைபர், மாண்புடன் ஓய்வுபெற்ற தத்துவப் பேராசிரியர், சைராகஸ் பல்கலைக்கழகம், நியூயார்க்

"யோகானந்தர் அமெரிக்க மத வாழ்க்கையின் வரைபடத்தை மாற்றியிருக்கும் ஒரு பிம்பமாக—ஒரு பிம்பமாக குறிப்பிடத்தக்க, ஆழமான, இனிமையான, கவித்துவம் வாய்ந்த, பேரண்ட வாழ்வில் பெரும் களிப்பெய்திய பரவசமான மனிதர்—ஆகி விட்டார்."

— ராபர்ட் எஸ். எல்வுட், பிஎச்.டி., தலைவர், மதப் பள்ளி, தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம்

"பரமஹம்ஸ யோகானந்தர் உலகிற்கு அளித்த பரிசு, உண்மையான இறை-அனுபூதி' யிலிருந்து வரும் தெய்வீகத்துடன் நாம் கொண்டிருக்க முடிகின்ற நெருக்கத்தை நினைவூட்டுவதாகும்."

— ராபர்ட் ஜே. விக்ஸ், பிஎச்டி., மேரிலாந்தின் லயோலா கல்லூரியில் மேய்ப்பர் ஆலோசனைத் துறையில் பட்டதாரிப் பாடநெறிகளின் தலைவர்

"அவர் ஒரு சிறந்த ஆத்மா மற்றும் அமெரிக்காவின் கலாச்சார வாழ்க்கையில் ஒரு நீடித்த நினைவையும் தாக்கத்தையும் விட்டுச் சென்றுள்ளார்."

— டாக்டர் தாகோபர்ட் ரூன்ஸ், தலைவர், தத்துவ நூலகம், நியூயார்க்

"பரமஹம்ஸ யோகானந்தர் மேற்கிற்கு இந்தியாவினுடைய இறை-அனுபூதியின் வற்றாத வாக்குறுதியை மட்டுமல்லாமல், ஒரு நடைமுறைக்கேற்ற வழிமுறையையும் கொண்டு வந்தார்; அதன்மூலம் வாழ்வின் அனைத்து தரப்பு ஆன்மீக ஆர்வலர்களும் அந்த இலக்கை நோக்கி வேகமாக முன்னேறலாம்...மேற்கில் உயர்ந்த மற்றும் மறைபொருளான தளத்தில் மட்டுமே முதலில் போற்றப்பட்ட இந்தியாவின் ஆன்மீக மரபு இப்போது நடைமுறையாக மற்றும் அனுபவமாக இறைவனை அறிய விரும்பும் அனைவருக்கும், இப்பிறவிக்கு அப்பால் அல்ல, ஆனால் இங்கே மற்றும் இப்போதே, கிடைக்கிறது....யோகானந்தர் ஆழ்ந்த அகமுகச் சிந்தனையின் மிக உயர்ந்த வழிமுறைகளை எல்லோருக்கும் எட்டும் தூரத்தில் வைத்துள்ளார்."

— குயின்சி ஹோவ், ஜூனியர், பிஎச்டி., பழங்கால மொழிகளின் பேராசிரியர், ஸ்க்ரிப்ஸ் கல்லூரி, கிளாரிமாண்ட், கலிபோர்னியா

"ஒவ்வொரு பாரம்பரியத்தின் புனித நூல்களும் மனிதகுலத்தின் அனைத்து மத மரபுகளையும் சார்ந்த மக்களின் பாரம்பரியமாக மாறப்போகும் ஒரு யுகத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம், அதேசமயம் முன்னால், நற்செய்திகள் (பைபிள்) கிறிஸ்தவத்தைச் சேர்ந்தவையாக இருந்ததைப் போல, அவை ஒரே ஒரு பாரம்பரியத்தின் மதிப்புமிக்க உடைமையாக இருந்தன. இந்த இறையியல் சார்ந்த உலகமயமாக்கல் முன்னேறிச் செல்லும் போது, சம்பிரதாயமாக ஒரு மதத்திற்கு வெளியே உள்ள மேன்மேலும் அதிகமானவர்கள் உள்ளே இருப்போரைவிட விட ஒரு மதத்தின் புனித நூல்களைப் பற்றி கருத்து தெரிவிப்பார்கள், ஏனென்றால் உலக மதங்களின் ஆய்வு உண்மையிலேயே உலகளாவியதாக இருந்தால், வெளியிலிருந்து ஒரு புனிதநூலைப் போற்றும் எந்தவொரு பாரம்பரியத்தையும் சார்ந்த மக்களின் எண்ணிக்கை, அதை உள்ளேயிருந்து போற்றிக் கொண்டிருப்பவர்களை விட அதிகமாக வரக்கூடும். என்னைப் பொறுத்தவரை பரமஹம்ஸ யோகானந்தர் அத்தகைய எதிர்காலத்தின் முன்னோடியாக விளங்குகிறார்.”

— —டாக்டர் அரவிந்த் சர்மா பிஎச் டி., ஒப்பீட்டு மதத்தின் பிர்க்ஸ் பேராசிரியர், மெர்க்கில் பல்கலைக்கழகம்

"[யோகானந்தரின் போதனைகள்] மனிதனின் உடல், மன மற்றும் ஆன்மீக இயல்புகளைப் பயிற்றுவிப்பதற்கும் ஒத்திசைய வைப்பதற்கும் மிகச் சிறந்தவை ஆகும்…

"ஒருமுகப்பாடு, தியானம் ஆகியவற்றின் எளிய மற்றும் அறிவியல் முறைகளால், வாழ்க்கையின் பெரும்பாலான சிக்கலான பிரச்சனைகள் தீர்க்கப்படலாம், மேலும் அமைதியும் நன்மையும் பூமியில் வரும். சரியான கல்வி பற்றிய [யோகானந்தரின்] கருத்து அனைத்து மாயவாதத்திலிருந்தும் நடைமுறைக்கு ஒப்பாதவைகளிலிருந்தும் விடுபட்ட தெளிவான பொது அறிவு; இல்லையெனில் அது என் ஒப்புதலைப் பெற்றிருக்காது....அது நான் பழகியிருக்கும் எதையும் விட பொற்காலத்தை அருகில் கொண்டுவரும்."

— லூதர் பர்பேங்க், தோட்டக்கலை நிபுணர்

"அவரது உடற்கல்வி முறையின் அழகு பண்டைய யோக முறையுடன் மேற்கத்திய வழிமுறைகளின் இணக்கமான சேர்க்கையில் உள்ளது....அவர் மாணவர்களுக்காக உடல், மனம் மற்றும் ஆன்மாவின் வளர்ச்சியில் ஒரு இணக்கத்தை நாடினார். தமது கல்விப் படிப்புகளுக்காக, மாணவர்கள் கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு அறிவுத் துறைகளில் சமீபத்திய கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் அவர் இந்தத் துறையிலும் ஒரு முன்னோடியாக இருந்தார். மாணவர்கள் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில், தொழில்-சார்ந்த கல்வியின் அவசியத்தை அவர் கணித்தார்….

“அந்த நேரத்தில் பரமஹம்ஸ யோகானந்தரின் கல்விக் கொள்கைகளை நம் தலைவர்கள் பின்பற்றாதது வருத்தமளிக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தொழில்-சார்ந்த கல்வி மற்றும் பணி அனுபவம் அவசியம் என்பதை நிபுணர்கள் இப்போது உணர்ந்திருக்கிறார்கள்....

"கல்வி பற்றிய அவரது கருத்து, உணர்வுகள் மீது தேர்ச்சி பெற்ற, அன்பு, நேர்மை, உண்மை, சகிப்புத்தன்மை, நம்பிக்கை ஆகிய உலகளாவிய கொள்கைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும், மற்றும் இச்சாசக்தி, தன்னம்பிக்கை, தற்சார்பு-உணர்ச்சி ஆகியவற்றை வளர்க்க முடிந்திருக்கும் ஒரு முழுநிறைவான மனிதனை உருவாக்குவதாகும்."

— —டாக்டர் தாரா முகர்ஜி, துணைவேந்தர், பீகார் பல்கலைக்கழகம், இந்தியா

"[பரமஹம்ஸ யோகானந்தர்] இமாலயப் பணியை ஆற்றினார். பல ஆர்வமுள்ள சாதகர்களுக்கு மறைந்திருக்கும் பேரொளியைக் காணவும், அவர்களின் தெய்வீகப் பெரும்-சுயத்தை உணரவும், மற்றும் தமக்குத்தாமே எஜமானர்களாக ஆகவும் கூட அவர் உதவினார். யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் தன் ஆசீர்வதிக்கப்பட்ட பணியை துன்பப்படும் மனிதகுலத்திற்கு இன்னும் அதிக தீவிரமாகவும் வெற்றிகரமாகவும் தொடரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்."

—பேராசிரியர் விளாடிமிர் நோவிகி,ப்ராக், செக்கோஸ்லோவாக்கியா

"நம் காலத்தின் மிக முக்கியமான போக்குகளில் ஒன்று, உணர்வுநிலைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவைப் பற்றிய அறிவியல் புரிதல் படிப்படியாக வெளிப்படுவது ஆகும்....மருத்துவர்கள், அத்துடன் அவர்களுடைய நோயாளிகளும், நமது அன்றாட ஆரோக்கியமும் நல்வாழ்வும் எந்த அளவிற்கு நம் மனநிலையைச் சார்ந்து இருக்கின்றன என்பதை இப்போது பார்க்கத் தொடங்கியுள்ளார்கள். நமது உடல்களின் நிலை உடல் காரணிகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது என்ற நம்பிக்கை மேம்பட்ட ஆராய்ச்சிக்கு முன்னால் அடித்துச் செல்லப்படுகிறது; இந்த ஆராய்ச்சி இதயத்திலிருந்து வயிறு வரையிலான ஒவ்வொரு உடல் அமைப்பின் செயல்பாட்டின் மீதும், நோயெதிர்ப்பு அமைப்பின் மீதுமே கூட ஆளுமை, உணர்ச்சிகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றின் தாக்கத்தைப் புள்ளிவிவர துல்லியத்துடன் ஆவணப்படுத்தியுள்ளது. உடல், மனம், ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயுள்ள தொடர்பை வெளிப்படுத்தியவாறு, இந்த ஆராய்ச்சிகள் நாள்பட்ட வேதனைக்குச் சிகிச்சையளிப்பதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன, மற்றும் பரமஹம்ஸ யோகானந்தர் பல ஆண்டுகளுக்கு முன்பு போதித்த "எப்படி-வாழ-வேண்டும்" கொள்கைகளின் மகத்தான மதிப்பை வெளிப்படுத்தும் வேதனை பற்றிய ஒரு கருத்திற்கு வழிவகுத்தது.

"நம் காலத்தின் மிக முக்கியமான போக்குகளில் ஒன்று, உணர்வுநிலைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவைப் பற்றிய அறிவியல் புரிதல் படிப்படியாக வெளிப்படுவது ஆகும்....மருத்துவர்கள், அத்துடன் அவர்களுடைய நோயாளிகளும், நமது அன்றாட ஆரோக்கியமும் நல்வாழ்வும் எந்த அளவிற்கு நம் மனநிலையைச் சார்ந்து இருக்கின்றன என்பதை இப்போது பார்க்கத் தொடங்கியுள்ளார்கள். நமது உடல்களின் நிலை உடல் காரணிகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது என்ற நம்பிக்கை மேம்பட்ட ஆராய்ச்சிக்கு முன்னால் அடித்துச் செல்லப்படுகிறது; இந்த ஆராய்ச்சி இதயத்திலிருந்து வயிறு வரையிலான ஒவ்வொரு உடல் அமைப்பின் செயல்பாட்டின் மீதும், நோயெதிர்ப்பு அமைப்பின் மீதுமே கூட ஆளுமை, உணர்ச்சிகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றின் தாக்கத்தைப் புள்ளிவிவர துல்லியத்துடன் ஆவணப்படுத்தியுள்ளது. உடல், மனம், ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயுள்ள தொடர்பை வெளிப்படுத்தியவாறு, இந்த ஆராய்ச்சிகள் நாள்பட்ட வேதனைக்குச் சிகிச்சையளிப்பதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன, மற்றும் பரமஹம்ஸ யோகானந்தர் பல ஆண்டுகளுக்கு முன்பு போதித்த "எப்படி-வாழ-வேண்டும்" கொள்கைகளின் மகத்தான மதிப்பை வெளிப்படுத்தும் வேதனை பற்றிய ஒரு கருத்திற்கு வழிவகுத்தது. யோகானந்தர் மற்றும் பிறரின் பணிகளிலிருந்து, யோக அறிவியலில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வம், பெரும்பாலும் அமெரிக்காவில், வளர்ந்துள்ளது; அங்கே பல யோக உத்திகள் அனுபவ ஆய்வுகளின் வழியாக நன்றாகப் பரிசோதிக்கப்பட்டு சுகாதாரச் சேவைகளில், முக்கியமாக மருத்துவ உளவியல் துறையிலும் நாள்பட்ட வேதனையுள்ள நோயாளிகளின் மேலாண்மையிலும், ஏற்றுக்கொள்ளப்பட்டது.

— —ஸ்டீவன் எஃப். ப்ரீனா, எம்.டி., மறுவாழ்வு மருத்துவத்தின் மருத்துவப் பேராசிரியர், எமோரி பல்கலைக்கழகம்; இயக்குநர்கள் குழுவின் தலைவர், ஜார்ஜியா வலி, கட்டுப்பாடு மற்றும் மறுவாழ்வு நிறுவனம்

"பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கையும் பணிகளும் கவர்ந்திழுக்கின்றன ... [அவரது] புகழ் ஒரு நறுமணத்தைப் போல் பரவியுள்ளது .... அமெரிக்காவிற்கும் உலகின் தொலை தூர எல்லைகளுக்கும். யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் பதாகையின் கீழ், அவர் பல நாடுகளில் எண்ணற்ற தியான மையங்களை நிறுவினார். ஆசிரமங்கள், கோவில்கள் மற்றும் அவரது பணி மையங்கள் இந்தியாவின் சிறந்த யோக அறிவியல் பயிற்சிக்கான புனித இடங்கள் ஆகும்....

"இந்த நவீன யுகத்தில், மேற்கின் பொருள்முதல்வாதம் முதன்மையாக இருந்தபோதிலும், கிழக்கிலிருந்து வந்த யோகியான பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக சாதனைகளில் எண்ணற்ற நபர்கள் ஆர்வம் காட்டியது அற்புதமான விஷயம். பெரிய மகான்களின் மறைஞானம் கலங்கிய மனித மனதிற்கான ஓர் ஆழ்ந்த ஈர்ப்பையும் நம்பிக்கையின் வாக்குறுதியையும் கொண்டுள்ளது. இவ்வாறு, பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கையால் பலர் உத்வேகமூட்டப்பட்டுள்ளனர் ....
"கிரியா யோகம் போன்ற ஆன்ம அறிவியலின் பயிற்சி, காடுகள் மற்றும் மலை குகைகளில் ஒதுங்கிய சன்னியாசிகளுக்கு மட்டுமே என்று பொதுவாக கருதப்பட்டது. பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கைப் பணித்திட்டம், உலகின் எந்தப்பகுதியிலும் சாதாரண குடும்ப வாழ்க்கையில் உள்ள ஒருவர் மிக உயர்ந்த ஆன்மீக நன்மையுடன் கிரியா யோகாவைப் பெறவும் பயிற்சி செய்யவும் முடியும் என்பதைக் காட்டுவதாகும். அவர் மனித குலத்திற்கு ஒரு உயர்ந்த சேவையை வழங்கியுள்ளார்.”

— டாக்டர் அசுதோஷ் தாஸ், எம்.ஏ., பிஎச்டி., டி. லிட்., பேராசிரியர், கல்கத்தா பல்கலைக்கழகம்

இதைப் பகிர