கருத்துரைகளும் மதிப்புரைகளும்

வசீகரிப்பது, மகிழ்விப்பது மற்றும் ஞான ஒளியூட்டுவது

“ஒரு யோகியின் சுயசரிதம், இதுவரை வெளிவந்த நூல்களில், மிகச் சிறப்பாக மகிழ்வூட்டும், அறிவூட்டும் ஆன்மீக நூல்களில் ஒன்றாக, நியாயமான காரணங்களுக்காகக் கொண்டாடப்படுகிறது.”

— ஆசிரியர், டாம் பட்லர்-பவ்டன்,
50 ஆன்மீக பாரம்பரியம்: காலம் கடந்த ஞானம் கொண்ட 50 உன்னத நூல்களின் நோக்கில் அக வெளிப்பாடு மற்றும் அறிவொளி

“ஞானம் நிறைந்த மற்றும் தனிப்பட்ட அனுபவங்களில் உயர்வான….யோகியின் சுயசரிதம் போன்ற அத்துணை அழகான, ஆழ்ந்த மற்றும் உண்மையுள்ள ஒரு புத்தகத்தை தற்கால வாசகர் அரிதாகவே காண்பார்….”

— லா பாஸ், பொலிவியா

"படிப்பதற்கு இனிய நடையில்...யோகானந்தர், யோகத்திற்கான வாதத்தை, நம்பி ஏற்கும் வகையில் முன்வைக்கிறார். ஆனால் ‘ஏளனம் செய்ய' வந்தவர்கள், ‘பிரார்த்தனை செய்ய' தங்கி விடக்கூடும்."

— சான் பிரான்சிஸ்கோ குரோனிகல்

"தெளிவான வெளிப்படுத்தல் மட்டுமே...இது மனித குலம் மேலும் நன்றாக புரிந்துகொள்ள உதவ வேண்டும்...ஆகச்சிறந்த சுயசரிதை... திகைப்பூட்டுவது... மகிழ்ச்சிகரமான நகைச்சுவையோடும் மறக்கமுடியாத நேர்மையோடும்... ஒரு புதினத்தை போன்ற கவர்ச்சியுடன் எழுதப்பட்டது."

— செய்தி-சென்டினல், ஃபோர்ட் வெய்ன், இந்தியானா

"ஒவ்வொரு ஆண்டும் பிரசுரிக்கப்படும் பல்லாயிரக்கணக்கான நூல்களில், மகிழ்விக்கக் கூடியவை, அறிவுறுத்த கூடியவை, நன்நெறி புகட்டுபவையாக உள்ளன. இம்மூன்றையும் ஒருசேரக் கொண்டுள்ள ஒரு புத்தகத்தை ஒரு வாசகர் கண்டால் அவர் தன்னைத்தானே அதிர்ஷ்டசாலியாக கருதிக் கொள்ள வேண்டும். ஒரு யோகியின் சுயசரிதம் இன்னும் அரிதானது — இது மனம் மற்றும் ஆன்மாவின் ஜன்னல்களை திறக்கும் புத்தகம்."

— இந்தியா ஜர்னல்

மிக அதிகம் விற்பனையாகும் ஆன்மீகப்பாதைக்கான வழிகாட்டி

“பல தசாப்தங்களாக, ஒரு யோகியின் சுய சரிதம் எங்களின் மிக அதிகமாக விற்பனை ஆகும் நூல்களில் ஒன்றாக உள்ளது. பிற நூல்கள் வருவதும் போவதுமாக இருக்க, இது தொடர்ந்து அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டே இருக்கிறது, ஏனெனில் காலந்தோறும் ஆய்வு செய்து பார்த்ததில், இந்நூல் ஆன்மீக நிறைவேற்றத்துக்கான பாதையை சுள்ளென்று உறைக்கின்ற வகையிலும், கம்பீரமாகவும் திறந்துவிடுகின்றது எனத் தெரிய வந்தது.”

— போதி மரம் புக் ஸ்டோர், லாஸ் ஏஞ்சல்ஸ்

“ஆன்மீகப் பாதையில் பயணிப்பவர்களில், இந்த ஆழமான இலக்கியப் படைப்பால் தாக்கமடையாத ஒருவரைக் காண்பது மிகவும் கடினம். இந்த நூல் எனக்கு யோகம், தியானம், சுய ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான பாதையை முதலில் திறந்தது, அது இன்றளவும் தொடர்கிறது.”

— ஜாக் கேன்ஃபீல்ட், ஆன்மா® தொடருக்கான சிக்கன் சூப்பின் இணை உருவாக்கியவர்

“வாசகரைக் கவர்ந்திழுக்கும் பக்கங்கள், ஏனெனில் அவை ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் உறங்கிக் கிடக்கும் உயர்ந்த நோக்கத்திற்கும் ஏக்கத்திற்கும் அழைப்பு விடுக்கின்றன.”

— Il டெம்போ டெல் லுனெடி, ரோம்

“ஆசிரியரால் 1946ல் முதலில் வெளியிடப்பட்டு பின்னர் விரிவாக்கப்பட்ட இது உலக ஆன்மீக இலக்கியத்தில் அதிக முக்கியத்துவம்வாய்ந்த நூல்களில் ஒன்று.”

— சாண்டா ஃபே சன்

“உள்ளத்தை மிக ஈர்க்கும் எளிமையும் சுயவெளிப்பாடும் கூடிய வாழ்க்கைக் கதைகளுள் ஒன்று....உண்மையான அறிவுப் புதையல். இதன் பக்கங்களில் ஒருவர் சந்திக்கும் தலைசிறந்த ஆளுமைகள்...செழுமிய ஆத்ம ஞானம் கைவரப் பெற்ற, நண்பர்களாக நினைவிற்குத் திரும்பி வருகின்றனர். இவர்களில் ஆகச் சிறந்த ஒருவர், இறை-உன்மத்தம் கொண்ட இந்நூலின் ஆசிரியரே!”

— டாக்டர். அன்னா வான் ஹெல்ம்ஹோல்ட்ஸ்-ஃபெலன், மினசோட்டா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியர்

இந்திய ஆன்மீக வளத்தின் ஓர் உட்பொருள் நிறைந்த மேலோட்டம்

ஒரு யோகியின் சுயசரிதம் நவீன யுகத்தின் உபநிஷதமாகக் கருதப்படுகிறது…. இது உலகெங்கிலும் சத்தியத்தைத் தேடும் பல்லாயிரக் கணக்கானவர்களின் ஆன்மீகத் தாகத்தைத் தணித்துள்ளது. இந்திய மகான்கள் பற்றிய இந்த நூல் கண்ட புகழின் பிரம்மாண்ட வீச்சை இந்தியாவில் நாங்கள் ஆச்சரியத்தோடும் பிரமிப்போடும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பாரதத்தின் என்றும் அழியா அறநெறியான சனாதன தர்மம் என்னும் அமரத்துவம் வாய்ந்த அமிர்தம், ஒரு யோகியின் சுயசரிதம் என்ற பொற் கிண்ணத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதில் நாங்கள் மிகுந்த மனநிறைவும், பெருமிதமும் கொள்கிறோம்.”

— டாக்டர். அசுதோஷ் தாஸ், M.A., Ph.D., D.Litt., பேராசிரியர், கல்கத்தா பல்கலைக்கழகம்

“நவீன இந்து மகான்களின் அசாதாரணமான வாழ்க்கைகள் மற்றும் ஆற்றல்களை கண்கூடாகக் கண்டு விவரித்துள்ள ஒன்றாக, இந்த நூல் காலத்தின் தேவையாகவும், காலங்கடந்து நிற்பதாகவும் உள்ளது..... அவரது வழக்கத்திற்கு மாறான வாழ்க்கை குறித்த பதிவுகள்…மேற்கத்திய நாடுகளில் இதுவரை வெளிவந்தவற்றைவிட இந்தியாவின் ஆன்மீகச் செல்வத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியவைகளில் ஒன்றாக நிச்சயம் உள்ளது.”

— W. Y. Evans-Wentz, M.A., D.Litt., D.Sc., புகழ்பெற்ற அறிஞர் மற்றும் கிழக்கு மதம் பற்றிய பல புத்தகங்களை எழுதியவர்

“யோகானந்தர் மரணமற்ற மகான்களையும் அதிசயமான குணப்படுத்தும் முறைகளைப் பற்றிக் கூறினாலும், பாரத ஞானம் மற்றும் யோக விஞ்ஞானம் பற்றி உணர்த்தினாலும் வாசகர்கள் வசப்பட்டு விடுகிறார்கள்.”

— டை வெல்ட்வோச், சூரிச், சுவிட்சர்லாந்து

எல்லா மதங்களின் ஆன்மீக மையம்

"இறுதியாக, பரவெளியில் சுழலும் உலகங்கள் முதல் மனித வாழ்க்கையின் மிக நுணுக்கமான தகவல் வரையிலான பிரபஞ்சத்தைப் பற்றிய முரண்பாடற்ற உள்ளுணர்வுப்பூர்வமாக மனநிறைவளிக்கும் சித்தரிப்பு."

— ரன்னர்ஸ் வேர்ல்ட்

“[யோகானந்தரின்] புகழ்பெற்ற ஒரு யோகியின் சுயசரிதத்தில், அவர் யோகப் பயிற்சியின் உயர் நிலைகளில் அடையப்பெறும் ‘பேரண்ட உணர்வுநிலை’ பற்றித் திகைக்கச் செய்யும் தவலைத் தருகிறார். மேலும் யோக மற்றும் வேதாந்த நோக்கிலிருந்து மனித இயல்பின் மீதான எண்ணற்ற ஆர்வமூட்டும் கண்ணோட்டங்களையும் காட்டுகிறார்.”

— ராபர்ட் எஸ். எல்வுட், Ph.D., தலைவர், மதப் பள்ளி, தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம்

“உங்களுடைய மத நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் உங்களை ஊடுறுவ உத்திரவாதமளிக்கும் சுய சரிதத்தின் சுத்த நம்பகத்தன்மைக்கு வெகுசில இணைகளே உள்ளன.”

— கிளைகள்

பத்திரிகை மதிப்புரைகள்

பரமஹம்ஸருடைய ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் 75ம் ஆண்டு நிறைவு நினைவு விழாவின் பகுதியாக, உங்களுடைய சொந்த வாழ்வில் நூல் ஏற்படுத்திய தாக்கத்தின் உங்களுடைய தனிப்பட்ட நினைவலைகளைப் பகிர்வதன் மூலம் நூலின் நீடித்த வசீகரத்தைக் கொண்டாட உங்களை நாங்கள் அழைக்கிறோம்.

இதைப் பகிர