நீங்கள் நீண்டநேரம் தியானம் செய்யும் போது…. மாபெரும் தெய்வீக ஞானம் ஒளிவீசுகிறது. தொடக்கத்திலிருந்தே ஏதோ ஒரு மாபெரும் சக்தி உங்கள் அகத்தே இருந்து வந்துள்ளது என்பதை நீங்கள் உணர்கிறீர்கள் என்றாலும் அதைப்பற்றிய அறியாமையில் இருந்துள்ளீர்கள்.”
—பரமஹம்ஸ யோகானந்தர்
அறிமுகம்
வழக்கமான செயற்பாடுகளைச் சற்றே நிறுத்தி மௌனம் எனும் பரிசை உங்களுக்கு வழங்கிக் கொள்ளுங்கள். அமைதி, அன்பு மற்றும் ஒளி எனும் சோலையில் நீங்கள் மூழ்கிவிடுங்கள்.

சிறப்பு வீடியோ
உங்களது உண்மையான ஆன்மாவைப் பற்றிய வழிகாட்டுதலுடன் கூடிய தியானம்
உங்கள் அகத்தே உள்ள சாசுவத மற்றும் பேரின்ப உணர்வுநிலை என உங்களைப் பற்றிய அறிதலுடன் மீண்டும் இணைவதற்காக, ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சன்னியாசி ஸ்வாமி இஷ்டானந்த கிரியின் வழிகாட்டுதலுடன் கூடிய தியானத்தில் கலந்து கொள்ளுங்கள். 2021 SRF உலக மகாசபையின் ஒரு பகுதியாக இருந்த இத் தியானத்தின் காலம் 20 நிமிடங்கள் ஆகும்

தியானத்தைத் தேர்ந்தெடுக்க
நீங்கள் தயாரானதும், கீழே ஒரு தியானத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த தியானங்கள் ஆங்கிலத்தில் உள்ளன மற்றும் சுமார் 15 நிமிடங்கள் வரை இருக்கும்.

விரிவடையும் அன்பு

அமைதியில் உங்களை நிலைநிறுத்துதல்

தெய்வீக அன்புச் சுடர்

இறைவனிடம் “ஆன்மாவின் அழைப்பை” விடுத்தல்

அக அமைதி

அச்சமில்லாமல் வாழ்வது பற்றி

வெற்றிக்கான அகச் சூழலை உருவாக்குதல்

உணர்வுநிலையின் விரிவாக்கம் பற்றி

ஒளியாக கடவுள் மீது

அன்பை விரிவாக்குவது பற்றி

அமைதி பற்றி