ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியின் இந்திய சுற்றுப்பயணம் – 2019

24 மே, 2019

நமது மதிப்பிற்குரிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி, 2019 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவின் மூன்று முக்கிய நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்குத் தலைமையேற்கப் போகிறார் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் நொய்டா (அக் 18 – 20), ஹைதராபாத் (நவம்பர் 1 – 3), மற்றும் மும்பை (நவம்பர் 8 – 10) ஆகிய இடங்களில் நடைபெறும். பூஜ்ய ஸ்வாமிஜி இந்தியாவில் குருதேவரின் பெரிய குடும்பத்துடன் நேரத்தை செலவிட ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார், மேலும் இந்த நற்பேற்றுக்குரிய வாய்ப்பை எங்களுக்கு வழங்கியதற்காக நாங்கள் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான இடங்களைத் தேர்ந்தெடுக்கும் போது, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அதிகபட்ச பக்தர்கள் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவதற்காக நன்கு ஆராய்ந்து பரிசீலனை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகள் உண்மையான ஆன்மீக ஆர்வலர்களுக்கு, நவீன கால வாழ்க்கையின் இடைவிடாத செயல்களிலிருந்து ஓய்வெடுப்பதற்கும், வெளிப்புற கவனச்சிதறல்கள் அனைத்திலிருந்தும் தங்களை விலக்கி, அமைதியுடன் இறைவனுடன் தொடர்புகொள்வதற்கு ஆழமாக மூழ்குவதற்கும், அதன் மூலம் உயர்ந்த மற்றும் நீடித்த பேரின்பத்தை அனுபவிப்பதற்கும் ஓர் அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது.

இந்த நிகழ்ச்சிகளில் YSS பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், ஒரு பக்தர் அவர் விரும்பும் ஒரு நகரத்தில் மட்டுமே விழாவில் கலந்து கொள்ளலாம். ஒவ்வோர் இடத்திலும் தங்கும் வசதிகள் குறைவாக இருப்பதால், வெளியூர் பக்தர்களுக்கு மட்டுமே தங்கும் வசதியை வழங்குவோம், அதுவும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்.


நிகழ்ச்சிகள் அட்டவணையில் அதிக இடைவெளியின்றியும், தங்குமிட ஏற்பாடுகள் மிகவும் எளிமையாகவும் இருக்கும் என்பதால், பலவீனமான உடல்நலம் அல்லது சிறப்புத் தேவைகள் உள்ள பக்தர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பதிவு செய்வதற்கான நடைமுறை  கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவுப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பும் முன், செயல்முறையை கவனமாக படிக்கவும்.

குருதேவர் கூறுகிறார்: “கடவுளுக்கான பக்தி மார்க்கத்தில், பக்தன் கூறுகிறான், ‘இறைவா, என் காணிக்கை போதுமானதாக இல்லாவிட்டாலும், என் அன்பை உனக்குக் கொடுப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன். நான் உனது பதிலை நாடவில்லை; என் அன்பை ஏற்றுக்கொள்ளும்படி நான் உன்னிடம் கேட்கவில்லை. நீ அதை ஏற்கிறாயோ, இல்லையோ; நீ பதிலளிக்கிறாயோ, இல்லையோ, எனது நிபந்தனையற்ற அன்பை உனக்கு வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்; அவ்வளவுதான். இதுவே எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சி.‘ ”

உங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் அக ஆனந்தம் மற்றும் அமைதி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் எங்கள் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

 

நிகழ்ச்சிநிரல் கண்ணோட்டம்

நிகழ்ச்சியில் குழுத் தியானங்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியான உத்திகள் பற்றிய விளக்கம் மற்றும் பிரபஞ்ச கீதமிசைக்கும் வேளைகள் ஆகியவை அடங்கும். இந்த அட்டவணை, சன்னியாசிகளுடன்தனிப்பட்ட ஆன்மீக ஆலோசனைக்கான வாய்ப்புகளையும், அமைதிக்கும் ஓய்விற்குமான நேரத்தையும் வழங்கும்.

தியானங்கள்

சன்னியாசிகள் நிகழ்ச்சி முழுவதும் தினமும் இருமுறை குழுத் தியானம் நடத்துவார்கள்.

தலைவருடன் சத்சங்கம்

யோகதா சத்சங்கப் போதனைகளைப் பற்றிய நமது புரிதலையும் பயிற்சியையும் ஆழப்படுத்துவதற்கு நமக்கு உதவுவதற்காக, நமது மதிப்பிற்குரிய தலைவர் குரு-அளித்துள்ள  சாதனா வைப் பற்றிய ஆன்மீகச் சொற்பொழிவுகளை வழங்குவார்.

தியான உத்திகள் மற்றும் சொற்பொழிவுகள்

சக்தியூட்டுதல், ஒருமுகப்படுதல் மற்றும் தியானத்தின் உத்திகள் விளக்கப்பட்டு செய்முறை மூலம் மெய்ப்பிக்கப்படும். இந்த வகுப்புகள் பின்வரும் மொழிகளில் நடத்தப்படும்:

நொய்டா & மும்பை

ஆங்கிலம் மற்றும் இந்தி

ஹைதராபாத்

ஆங்கிலம் மற்றும் தெலுங்கு

குருதேவரின் எப்படி-வாழ-வேண்டும் நியதிகள் பற்றிய சொற்பொழிவுகளும் அட்டவணையின் ஒரு பகுதியாக இருக்கும்.

கிரியா யோக தீட்சை: நடத்தப்படவில்லை

இந்த நிகழ்ச்சிகளின் போது கிரியா யோகா  தீட்சை ஏற்பாடு செய்யப்படாது.

தீட்சை பெற்றுக் கொள்வதற்கு ஆர்வமாக இருக்கும் பக்தர்கள், பின்வரும் நகரங்களில் மூன்று நாள் நிகழ்ச்சிகள் / ஏகாந்தப் பயிற்சிகளின் போது நடக்கவிருக்கும் தீட்சை சடங்குகளில் பங்குபெறலாம்:

திருச்சூர் (ஆகஸ்ட் 2 – 4), சேலம் (ஆகஸ்ட் 9 – 11), ராஞ்சி (ஆகஸ்ட் 9 – 12),
பெங்களூரு (செப். 13 – 15), லக்னௌ (செப். 13 – 15), பாட்னா (செப்டம்பர் 20 – 22),
ஷிவமொக்கா ( செப்டம்பர் 21 – 22), துவாரஹாத் (செப்டம்பர் 26 – 30).

மேலும் விவரங்களுக்கு எங்கள்  இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது ராஞ்சியில் உள்ள உதவி மையத்தை  அழைக்கவும்.

தொண்டர்கள்

பதிவு செய்தல், தங்குமிடம், ஆடியோ காட்சிகள், புத்தகக் கடை, அலங்காரங்கள், உணவு, பராமரிப்பு, மருத்துவம், சுகாதாரம், பாதுகாப்பு, மேடை ஏற்பாடுகள், இருக்கைக்கு வழிநடத்துவோர், போன்ற பல்வேறு பகுதிகளில் சேவை செய்ய எப்போதும் போல, பல அன்பர்கள்-தன்னார்வலர்கள் தேவைப்படுவார்கள். இவற்றில் சில பகுதிகளில் ஒரு சில தன்னார்வலர்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு தேவைப்படுவார்கள். நீங்கள் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்பினால், அதற்கேற்ப பதிவுப் படிவத்தில் குறிப்பிடவும்.

பதிவுத் தகவல்

நிகழ்ச்சிநிரல்

ஒவ்வொரு நகரத்திலும் நிகழ்ச்சிகள் தொடக்க நாளின் காலையில் தொடங்கி இறுதி நாளின் பிற்பகலில் முடிவடையும். அதற்கேற்ப உங்கள் வருகை மற்றும் புறப்பாடு குறித்து திட்டமிடலாம். தன்னார்வலர்களைத் தவிர, அன்பர்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முந்தைய நாள் மதியம் 12 மணிக்கு முன்னதாக வரவேண்டாம் என்றும், கடைசி நாளின் மாலைக்கு மேல் தங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தங்குமிடம்

பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனியாக பகிரக்கூடியது / பலர் தங்கக்கூடியது போன்ற தங்குமிடம் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர்கள் அதற்கேற்ப திட்டமிட்டு துணிமணிகள் ஏற்பாடு செய்யலாம். தங்குமிடம் அல்லது உணவுக்கு சிறப்புத் தேவையுடைய அன்பர்கள் தங்களின் சொந்த ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். அருகிலுள்ள ஹோடல்களின் பட்டியல் கேட்டுக் கொள்வதன் பேரில் வழங்கப்படும்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில்

மூன்று நகரங்களிலும் குறைந்த அளவு தங்குமிட வசதிகள் இருப்பதால், ஒய் எஸ் எஸ ஏற்பாடு செய்யப்பட்ட தங்குமிடத்திற்கான வேண்டுகோளுடன் கூடிய பதிவுகள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உறுதிப்படுத்தப்படும்.

பக்தர்கள் தங்கள் விருப்ப வரிசையைக் குறிப்பிட்டு இந்த நகரங்களைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் முதல் விருப்பத்தின் இருப்பிடத்தை எங்களால் ஒதுக்க முடியவில்லை என்றால், விருப்ப வரிசையின்படி மற்ற இடங்களை ஒதுக்க முயற்சிப்போம்.

உள்ளூர் பக்தர்களுக்கு தங்குமிட வசதி செய்ய முடியாது. பின்வரும் மாவட்டங்கள்/பகுதிகள் தொடர்புடைய நகரங்களுக்கு உள்ளூர் என்று கருதப்படும்:
நொய்டா:  நொய்டா, கிரேட்டர் நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத், டெல்லி, புது டெல்லி, குருகிராம்.
ஹைதராபாத்: ஹைதராபாத், ரங்கா ரெட்டி, மேட்சல்-மல்காஜ்கிரி.
மும்பை: மும்பை, தானே, நவி மும்பை.

கட்டணம் அனுப்புதல்
பதிவுக் கட்டணம் ஒரு நபருக்கு ₹ 750*.

விரைவான மற்றும் எளிதான பதிவுக்கு, தயவுசெய்து

நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்ய முடியாவிட்டால், நீங்கள் பதிவுப் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம் [ஆங்கிலம் | ஹிந்தி], அதைப் பூர்த்தி செய்து, நீங்கள் அனுப்பும் தொகையுடன் தபால் மூலம் அனுப்பவும்.

உங்கள் நன்கொடைகள் தேவை
தங்குமிடத்தை அளிப்பதற்கு குறிப்பிட்ட தொகை விதிக்கப்படவில்லையெனினும் தங்குமிட செலவினங்கள் ஒருவருக்கு மூன்று நாட்களுக்கு சுமார் ₹ 1500 முதல் ₹ 2000 வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் இந்த மற்றும் பல்வேறு செலவினங்களை ஈடுகட்ட நாங்கள் நன்கொடைகளை வேண்டுகிறோம். குறைந்த வசதியுள்ள அன்பர்கள் கூட பங்கேற்கும் வகையில் பதிவுக் கட்டணம் மற்றும் உணவுக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்தக் குறைந்த கட்டணத்தை ஏற்பாடு செய்வதில் எங்களுக்கு உதவி, அதன் மூலம் குருதேவரின் விருந்தோம்பலை உண்மையான சாதகர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தும் வகையில், பெரும் நன்கொடைகளை வழங்க முடிந்தவர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

பதிவு செய்வதற்கான கடைசித் தேதி
YSS ஏற்பாடு செய்யப்பட்ட தங்குமிடம் தேவைப்படுபவர்களுக்கு, பதிவுப் படிவமும், கட்டணம் அனுப்பும் தொகையும்  ஜூலை 31, 2019 அன்று அல்லது அதற்கு முன் அந்தந்த ஆசிரமம்/தியான கேந்திராவைச் சென்றடைய வேண்டும்.

தங்களுடைய தங்குமிட ஏற்பாடுகளை தாங்களே செய்துகொள்பவர்களுக்கும், உள்ளூர் பக்தர்களுக்கும், பதிவு செய்வதற்கான கடைசித் தேதிகள்:

நொய்டா: அக்டோபர் 4; ஹைதராபாத்: அக்டோபர் 18; மும்பை: அக்டோபர் 25

எவ்வாறாயினும், பதிவுக்கான வேண்டுகோள்கள் (தங்குமிடம் அல்லது இல்லாமலே) அதிகபட்ச வரம்பை எட்டிவிட்டால், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான பதிவு முன்கூட்டியே மூடப்படலாம்.

எங்களால் உங்களைப் பதிவு செய்ய முடிந்தால், SMS, மின்னஞ்சல் அல்லது கடிதம் மூலம் உங்கள் பதிவை உறுதிப்படுத்துவோம்.

உணவு
உணவிற்கு பங்களிப்பு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ₹ 250.* நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தவுடன் இதை செலுத்தலாம்.

* பதிவுக் கட்டணம் அல்லது உணவுக் கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமம் இருந்தால், உள்ளூர் ஆசிரமம்/கேந்திராவைத் தொடர்பு கொள்ளவும்.

 

தொடர்பு தகவல்

நொய்டா, அக்டோபர் 18 – 20, 2019
யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் ― நொய்டா

பரமஹம்ஸ யோகானந்தா மார்க், பி-4, பிரிவு 62
நொய்டா 201307, மாவட்டம். கவுதம் புத்தா நகர்
உத்தரப் பிரதேசம்; தொலைபேசி: 9899811808, 9899811909, 0120 – 2400670-71, 0120 -2401670 -72;

மின்னஞ்சல்: yssnoidasang[email protected]

இடம்: யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் – நொய்டா

ஹைதராபாத், நவம்பர் 1 – 3, 2019
யோகதா சத்சங்க தியானா கேந்திரா – ஹைதராபாத்

1, சிகோடி கார்டன்ஸ், 1-10-63 / 1, நல்லி சில்க்ஸ் பின்னால்
பேகம்பேட், ஹைதராபாத் 500016, தெலுங்கானா
தொலைபேசி: 7093720623, (040) 27767261

மின்னஞ்சல்: ysdk.hyder[email protected]

கூடுதல் தொடர்பு நபர்கள்: ஸ்ரீமதி. சௌஜன்யா: 8425849291; ஸ்ரீ பி. மல்லையா: 8247381797, 9014408886; ஸ்ரீ ஓ.வி.ராதாகிருஷ்ணா: 9295709629

இடம்: கிளாசிக் கார்டன்ஸ், 152, அண்ணா நகர் சாலை, பாலம்ராய், ராணிபாக், செகந்திராபாத், தெலுங்கானா 500003

மும்பை, நவம்பர் 8 – 10, 2019
யோகதா சத்சங்க தியான கேந்திரா ― மும்பை
‘ஆசிர்வாத்’ கட்டிடம், திலக் ரோட் எக்ஸ்டன்ஷன்
வடலா பேருந்து நிலையம் அருகில், வடலா (W)
மும்பை 400031, மகாராஷ்டிரா;
தொலைபேசி: 9969669281, (022) 24103163

மின்னஞ்சல்: [email protected]

கூடுதல் தொடர்பு நபர்கள்: ஸ்ரீமதி. ஜானகி பட்வர்தன்: 9969000717; ஸ்ரீமதி. சந்தியா மாஸ்லி: 9820534611; ஸ்ரீமதி. மீனாட்சி கிருஷ்ணன்: 9930535009; திருமதி ஆர்மின் அங்க்லேசாரியா: 9820767890

இடம்: பாரதிய கிரிதா மந்திர் விளையாட்டு வளாகம், சாலை எண் 26, சஹகர் நகர், வடலா பேருந்து நிலையத்திற்குப் பின்புறம், வடலா (மேற்கு), மும்பை 400031. இடம் மும்பை தியான கேந்திராவிலிருந்து மூன்று நிமிட நடை தூரத்தில் உள்ளது.

விசாரணைகள்

ஏதேனும் கேள்விகளுக்கு, மேலே குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு இடத்திற்கும் தொடர்புடைய தொடர்பு எண்கள் அல்லது YSS ராஞ்சி உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளவும்:
Phone: +91 (651) 6655 555
திங்கள் – சனி: காலை 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை; அல்லது
மின்னஞ்சல [email protected]செய்யவும்.

பதிவுப் படிவத்தைப் பதிவிறக்கவும்  [ஆங்கிலம் | இந்தி]

இதைப் பகிர