ஸ்வாமி சிதானந்தஜியின் இந்திய சுற்றுப்பயணத்தைப் பற்றிய ஊடகச் செய்தி

4 நவம்பர், 2019

நொய்டாவில் ஊடகச் செய்தி

இந்தியாவின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் பிரபலமான தொலைக்காட்சி மற்றும் வானொலி நெட்வொர்க்குகளாகிய ஸ்பீக்கிங் ட்ரீ, தேசிய தொலைக்காட்சி சேனல் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவற்றுடன் சுவாமி சிதானந்தஜியின் நேர்காணல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

இந்த நேர்காணல்களில் (YSS நொய்டா ஆசிரமத்தில் மூன்று நாள் நிகழ்ச்சிக்காக அவர் நொய்டாவில் இருந்தபோது நடத்தப்பட்டது), ஸ்வாமி சிதானந்தஜி யோகா, அதன் உலகளாவிய ஆன்மீகம் மற்றும் தியானத்தின் உத்திகளுடன் எவ்வாறு இந்த காலத்திற்கு மிகவும் தேவையான வாழும் திறனாகும் என்பது உட்பட பல தலைப்புகளில் பேசுகிறார்.

ஸ்பீக்கிங் ட்ரீ-யுடன் ஸ்வாமி சிதானந்த கிரியின் பேட்டி

தூர்தர்ஷன் நெட்வொர்க்குடன் நேர்காணல்

அகில இந்திய வானொலியுடன் நேர்காணல்

இந்த நேர்காணலில் —”யோகா, ஆன்ம-அனுபூதி மற்றும் நவீன காலத்தில் ஆன்மீக விழிப்புணர்வு” என்ற தலைப்பில் — ஸ்வாமி சிதானந்தா ஒவ்வோர் ஆன்மாவிற்குள்ளும் உள்ள தெய்வீகத்தன்மையை வெளிக்கொணர, யோக அறிவியலைப் பயன்படுத்துவதற்கு மிகவும் மும்முரமாக இருக்கும் மக்கள் கூட நேரத்தைக் காண முடியும் என்பது பற்றி விரிவாகக் கூறுகிறார். பருப்பொருள் அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள உண்மையான தொடர்பைப் பற்றியும்; வரலாற்றை மாற்றியமைப்பதற்கான மகாத்மா காந்தியின் வலிமை மற்றும் ஆற்றலின் ஆதாரம் பற்றியும்; இன்றைய இளைஞர்கள் தங்கள் தனிப்பட்ட அடையாளங்களை நிலைநிறுத்துவதற்காக உண்மையான சுய-மரியாதை, அன்பு மற்றும் அர்த்தத்தைக் காண்பதற்கு செயல்படும் போது தேவையான உள்ளாற்றல் மற்றியும் —“வெளிப்புறமாகப் புரிந்துகொள்வதன்” மூலம் அல்லாமல், மாறாக தியானத்தில் பெறப்பட்ட அக மதிப்பீடு மூலமான ஆற்றல் பற்றி — அவர் பேசுகிறார்.

இந்த நேர்காணல் அகில இந்திய வானொலியால் பதிவு செய்யப்பட்டு அக்டோபர் 16, 2019 அன்று ஒலிபரப்பப்பட்டது.

டிடி-நியூஸில் செய்தி அம்சம்

டிடி-நியூஸ், நொய்டாவில் YSS-ன் மூன்று நாள் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியைக் கொண்டிருந்தது — ஸ்வாமி சிதானந்தாஜி “இது போன்ற மன அழுத்த வேளைகளில் யோகாவின் முக்கியத்துவத்தை”யும், “யோகா மற்றும் ஆன்மீகத்தின் மூலம் சமநிலையான வாழ்க்கை”யின்” அவசியத்தையும் எவ்வாறு விளக்கினார் என்பதை மையப்படுத்தி இருந்தது. யோகா பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுவதும் பரப்புவதில் பரமஹம்ஸரின் ஒரு யோகியின் சுயசரிதம் ஆற்றும் பங்கையும் சிறப்பித்தது.

அச்சு ஊடகச் செய்தி

நொய்டா

இதைப் பகிர