நெருக்கடி அல்லது ஆன்மீக வாய்ப்பு?

25 மார்ச், 2020

சுவாமி சிதானந்த கிரியிடமிருந்து ஒரு செய்தி

அன்பர்களே,

நாட்கள் வாரங்கள் செல்லச் செல்ல, பரவிவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, உலகம் முழுவதும் உள்ள அதிகமான மக்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களிலுள்ள எங்கள் அனைவரின் பிரார்த்தனையும், அன்பும், நல்லெண்ணமும் மீண்டும் மீண்டும், நாம் பகிர்ந்து கொள்ளும் ஆன்மீக பந்தத்தின் சக்திவாய்ந்த சங்கல்பம் மூலம் உங்களை வந்தடைகின்றன. உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் தெய்வீகத் தோழமை வெளிப்பாடுகளை நாங்கள் உணர்கிறோம், அவைகளால் ஆழமாக நெகிழ்விக்கப்பட்டுள்ளோம். இவை பரமஹம்ஸரைப் பின்பற்றுபவர்களின் உலகளாவிய குடும்பத்தை பரஸ்பர ஆதரவு மற்றும் ஆன்மீக சக்தியின் உணரத்தக்க மற்றும் துணிவை மீட்டெடுக்கும் அதிர்வுகளால் மிகவும் அற்புதமாக ஊக்கப்படுத்துகிறது.

மோசமான காலங்களைப் பற்றிய ஒரு நல்ல விஷயம் என்னவெனில், அவை பெரும்பாலும் அசாதாரணமான முறையில், நமக்குள் இருக்கும் மிகச் சிறந்ததை—நாம் அனுமதித்தால்—வெளிக்கொணரும் எனக் கூறப்படுகிறது. நெருக்கடி, பேரழிவு அல்லது வரலாற்றில் அச்சுறுத்தல் ஏற்படும் எந்த நேரத்திலும், மக்கள் இரண்டு வழிகளில் ஒன்றில் எதிர்வினையாற்றுவதைக் காணலாம்: ஒன்று அவர்கள் அச்சங்கள், தடைகள் மற்றும் அவர்களின் கட்டுப்பாடற்ற மனங்கள் மற்றும் பயிற்சியற்ற விருப்பாற்றலின் இழிவான சுயநலம் ஆகியவை தங்களை விளக்க அனுமதித்தனர்; அல்லது அந்த சவாலான நேரத்தை அவர்களின் வெல்ல முடியாத ஆன்மாக்களின் அற்புதமான தெய்வீக குணங்களையும் உள்ளுறை ஆற்றலையும் கண்டறிந்து வெளிப்படுத்த உந்துதலாகப் பயன்படுத்தினர்.

நாம் ஒவ்வொருவரும் இந்த (அல்லது எந்த) உலக நெருக்கடியான காலத்தை தனிமனிதர்களாக, இறைவன் மற்றும் குருதேவரின் சீடர்களாக நமது வளர்ச்சியில் ஒரு முக்கிய தருணமாக மாற்ற முடியும். பல வருடங்கள் கழித்து, இந்தக் கடினமான காலங்களைத் திரும்பிப் பார்த்து, “ஆமாம், என்னுடைய பல ஆண்டுகால ஆன்மீகப் படிப்பு மற்றும் சுய முன்னேற்றத்திற்கான முயற்சிகளின் விளைவுகளை வெளிக்கொணரவும், வெளிப்படுத்தவும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன். அப்போதுதான் நான் ‘என்றாவது ஒரு நாள்’ அடைய வேண்டும் என்று விரும்பிய ஆன்மீகப் பண்புகளைப் பற்றி சிந்திப்பதில் இருந்து உண்மையில் அவற்றை வாழ்வதற்கான அகத்துள் ஆழ்ந்திருத்தலை மேற்கொண்டேன்.” என்று கூறுவோம்.

நம்பிக்கை மற்றும் ஆன்மீக நுண்ணறிவுக் கண்களால் பார்க்கும்போது, மனிதகுலத்தை பாதிக்கும் அனைத்து கடுமையான சோதனைகளும் நமது கிரகத்தின் ஆன்மீகப் பரிணாமத்தை துரிதப்படுத்த தேவையான படிப்பினைகளை குறிப்பிடுகின்றன.  மற்ற சந்தர்ப்பங்களில் நான் கூறியது போல், வரலாற்றின் இந்த கட்டத்தில் மனித குலத் தேவையின் சாராம்சம் குறிப்பாகவும் சுருக்கமாகவும் பரமஹம்ஸ யோகானந்தரால் சமயசார்பற்ற மற்றும் உலகளாவிய நன்மை பயக்கும் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப்  இலட்சியங்கள் மற்றும் குறிக்கோள்களில் முன் வைக்கப்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன். இந்த வாய்ப்பை நாம் உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டால், இது முதன்மையாக துன்பம் மற்றும் ஊக்கமின்மையின் காலமாக இருக்காது. மாறாக, நாம் சவாலுக்கு ஆளான நேரமாக இருக்கட்டும், அந்தச் சவாலை நாம் எதிர்கொண்டோம் – நமது ஆற்றலால் கணத்திற்கு கணம், நாளுக்கு நாள், நம் குருதேவரின் முக்தியளிக்கும் குறிக்கோள்களை நமதாக்கிக் கொள்வதன் மூலம் நம்மைப் பற்றி பெருமைப்படச் செய்தோம், என்பதாக இருக்கட்டும்.

அவரது ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் போதனைகளில், வாழ்க்கைப் போர்க்களத்தில் ஆயுதம் முழுவதும் கொண்ட தெய்வீகப் போர்வீரனாக காட்டுவதற்குத் தேவையான-சக்திவாய்ந்த நேர்மறை எண்ணங்கள் மற்றும் அவற்றைச் செயல்படுத்தும் விருப்பம், உடலின் ஆரோக்கியத்தில் மனம் மற்றும் ஆன்மாவின் சக்திவாய்ந்த தாக்கம் பற்றிய அறிவு,” நன்மை மூலமாகத் தீமையையும், மகிழ்ச்சியின் மூலமாகத் துயரத்தையும், அன்பின் மூலமாகக் கொடுமையையும், ஞானத்தின் மூலமாக அஞ்ஞானத்தையும் வெல்ல”த் தேவையான திறன்கள், ஒரு வெற்றியாளருக்கு வேண்டிய துணிவு மற்றும் தன்னம்பிக்கை – ஆகிய ஆன்மீகக் கருவிகள் நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதற்கு நாம் எவ்வளவு பாக்கியசாலிகள். கடினமான சூழ்நிலைகள் ஆன்மீகப் பாதையில் நாம் படித்ததை சோதனைக்கு உட்படுத்துவதால், நாம் கிரகித்துக் கொண்ட அனைத்தும் கற்றலில்em> இருந்து செயல்பாட்டிற்கு மாற்றப்படட்டும். அந்தச் செயல்பாட்டின் போது, நம்மிடமுள்ள நாமே இதுவரை அறியாத ஆற்றலையும், நடைமுறைக் கேற்ற சரியான செயல்கள் புரிவதற்கான உள்ளுணர்வு-வழிகாட்டப்பட்ட புரிதலையும், (மிக முக்கியமாக) அன்பு அளித்தலுக்கான விரிவாக்கும் திறனையும் கண்டறிவோம். வாழ்க்கையில் ஸ்திரத்தன்மைக்கான நமது வெளிப்புற ஆதாரங்களுக்கு சவாலாக இருக்கும் சூழ்நிலைகளில், அவை நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நம்மை எரிச்சலடையச் செய்வதற்கு அல்லது பொறுமையற்றவர்களாக மாற்ற அனுமதிப்பதற்கு பதிலாக, நமது சொந்த அச்சங்கள் மற்றும் பாதுகாப்பின்மைகளை எதிர்கொள்ளவும் அவற்றை இறைவனுக்குக் சமர்பித்து விடவும் கற்றுக்கொள்வோம். அன்பான, மகிழ்ச்சியான, அமைதியான மற்றும் திடசித்தத்துடன் தியானம் செய்பவர்களின் உதாரணம் மற்றவர்களையும் அதே போல இருக்க ஊக்குவிக்கிறது. இதுபோன்ற வழிகளில், நாம் கடந்து சென்று கொண்டிருக்கும் இது போன்ற சவால்கள் நம் சொந்த ஆன்மீக வளர்ச்சிக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர் களுக்கும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் நன்மை பயக்கும்.

இந்த நேரத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சவால்களுடன் கூட, கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் தங்கள் வாழ்வும் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டுள்ள உலகெங்கிலும் உள்ள பல ஆன்மாக்களுக்காக உங்கள் இதயம் மிகவும் பரிவு கொள்வதை நான் அறிவேன். உங்களில் பலர் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா மற்றும் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் சன்னியாசிகளான எங்களின், குணப்படுத்துதல் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமின்றி, உடல்நலம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்காக, வாழ்க்கையின் பல துறைகளில் உள்ள வழங்குநர்கள் தங்கள் திறமைகள், கருணை மற்றும் துணிவின் மூலம் நம் அனைவருக்கும் உதவுகிறவர்களுக்குமான தினசரி பிரார்த்தனையில் இணைவற்காக நான் நன்றியுள்ளவனாகவும், எழுச்சியடைந்தவனாகவும் இருக்கிறேன்.  . உங்கள் வீடுகளில் அல்லது  எஸ் ஆர் எஃப் ஆன்லைன் தியான மையத்தில் திட்டமிடப்பட்டுள்ள பல கூட்டு தியானங்களில் ஒன்றில் நமது குருதேவரின் குணப்படுத்தும் உத்தியை செய்து, உங்கள் பிரார்த்தனைகளைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் சூழலிற்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ள ஆரோக்கியம் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்கவும்; மற்றும் “சமூக விலகல்” விதிகள் உங்கள் தினசரி வழக்கத்தில் சிறிது கூடுதல் நேரத்தை உருவாக்கினால், உங்களையும் உங்கள் சரியான செயல்களால் நீங்கள் தொட்டு சேவை செய்யக்கூடிய அனைவரையும் மேம்படுத்த நன்றியுடன் பயன்படுத்தவும். வெளித்தோற்றத்தில் விலகியுள்ள ஆனால் உள்முகமாக ஒன்றுபட்ட ஆன்மாக்களின் குழுவாக, வலிமை மற்றும் உத்வேகத்தின் எல்லையற்ற மூலத்திலிருந்து தொடர்ந்து நம்மை நாமே திறனேற்றிக் கொள்வோம். இறைவனின் இருப்புடன் நம் இதயங்களையும் மனதையும் இசைவித்து, அவனை நம் உணர்வுநிலையின் துருவ நட்சத்திரமாக ஆக்குவதன் மூலம், இந்த இருண்ட மற்றும் கடினமான காலங்களில் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நமது வழியைக் காண்போம், அதே நேரத்தில் ஒட்டுமொத்த மனித குடும்பத்தின் தற்போதைய ஆன்மீக பரிணாமத்திற்கு பங்களிக்க நமக்கான பகுதியை செய்வோம்.

இறைவனும் குருதேவரும் உங்களை எப்போதும் ஆசீர்வதித்து வழிநடத்தட்டும்.

சுவாமி சிதானந்த கிரி

இதைப் பகிர