சுவாமி சிதானந்த கிரியின் கிறிஸ்துமஸ் செய்தி 2020

4 டிசம்பர், 2020

கிறிஸ்துமஸ்-25-2020

அன்பரே,

உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ்! நான் பிரார்த்திக்கிறேன். கடவுளின் ஒளியையும் பேரானந்தமும் புதுப்பிக்கப்பட்ட அபரிமிதத்துடன் உங்களின் இதயம் ஏற்றுக் கொள்ளட்டும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமது ஆன்மீக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் இதயமும் இந்தப் புனிதக் காலம் முழுவதும் ஏற்றுக் கொள்ளட்டும். இயேசு கிறிஸ்து மற்றும் குருவின் சிறப்பான ஆசீர்வாதங்கள் நம் ஒவ்வொருவரையும் உயர்த்தி, மேலான உணர்வு நிலைக்கு நமது குடும்பம் எதிர்கொள்ளும் சவால்களை ஆன்மீக உண்மை மற்றும் கடவுளின் மதிப்புகள் மிக்க வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றுவதற்குத் தேவையான நிலைக்கு நம்மை உயர்த்தட்டும். குழந்தை இயேசு கிறிஸ்து பிறந்த பொழுது 1000 ஆண்டுகளுக்கு முன் பிரகாசித்த ஒளியும், பேரானந்தமும் மீண்டும் தோன்றி, இந்த புனித கால ஆண்டில்- பிரகாசமான கிறிஸ்துவின் சக்தி வாய்ந்த அன்பு நம் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தி உலகத்தைக் குணப்படுத்தட்டும். அந்த, அன்பும், பேரின்பமும் நம் ஆன்மாவின் சாராம்சமாக இறைவனின் உருவில் படைக்கப்பட்டு அவற்றைப் பற்றி அறிய முற்பட்டால், அசைக்கமுடியாத நம்பிக்கை, உறுதி போன்றவற்றைப் பிறப்பிக்கின்றது.

இந்த இருமைப் பகுதியில் வாழ்க்கையின் முரண்பாடுகள் மற்றும் நிச்சயமற்ற நிலைகள் இருந்த போதிலும், நாம் எப்பொழுதும் எளிதாக அணுகக்கூடிய நமது பரலோகத் தந்தையின் மற்றும் இறைவன் நமக்கு உதவ அனுப்பிய இறைவனுடன் ஐக்கியமான ஆன்மாக்களின் ஊக்கமும், ஆதரவும் நமக்குக் கிடைக்கட்டும். அத்தகைய ஒருவரே, எம்பெருமானாகிய இயேசு. அவருடைய வாழ்க்கை தெய்வீக குணங்களின் அழகான இணக்கமான தொகுப்பாக அமைந்து நம்மை உயர்த்தும் வெளிப்புற சூழ்நிலைகள் மற்றும் மனிதர்கள் போன்ற அனைத்து வரம்புகளையும் தாண்டி, நம் அகத்தை சுதந்திரமான இறை உணர்வு நிலையில் வாழச் செய்கின்றது. நமது குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர், ஆன்மீக சாதனை என்பது விதிவிலக்காக போற்றப்பட வேண்டியது அல்ல. ஆனால், நாம் அனைவரும் எதை உணர்ந்து அடைய வேண்டும் என்பதற்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டாகும். மேலும், பூமியில் இந்த நல்ல நேரத்தில் பிரகாசமாகப் பரவும் “கிறிஸ்துமஸ் உற்சாகம்” அல்லது பரலோக அதிர்வுகள், கிறிஸ்து போன்ற குணங்களை எளிதாக வெளிப்படுத்தச் செய்யவும், சிறிய “நான்” என்ற உணர்வுகளுக்கு அப்பால் நமது கருணை, புரிதல், மன்னிப்பு மற்றும் பார்க்கும் அனைத்திலும் நல்லதையும் கடவுளையும் காண வேண்டும். நமது ஒவ்வொரு ஆசையான சிந்தனையையும் உன்னதமான செயலாக மாற்றும் பொழுது இயேசு கிறிஸ்து வாழ்ந்த கிறிஸ்து உணர்வு நிலையை நாம் நெருங்கிச் செல்கிறோம்.

இயேசு கிறிஸ்து தனக்கான வலிமை, ஞானம் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய அன்பு போன்றவற்றை நமது பரலோகத் தந்தையுடன் கூடிய அகத் தொடர்பாலும். அதேபோல் நாமும் விசுவாசமான தியானம் மற்றும் பிரார்த்தனை மூலம் நம்முள் இருக்கும் உன்னதத்தையும், வெளிக்கொணரவும் அதன்மூலம் நம் காலத்தில் உள்ள பிளவுகளைக் குணப்படுத்தவும் உதவுகிறது. அமைதி நம் ஒவ்வொருவரிடமிருந்தும் தொடங்குகிறது. இந்த வழியில் நமக்கு நூறு ஆண்டுகளுக்கு முன் நாம் கொண்டு வந்த புனித அறிவியலின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. இயேசுவும், பாபாஜியும் இணைந்து நம்மிடையே இறைவனுடனும், உலகளாவிய கிறிஸ்துவுடனும் தொடர்புகொள்ள உதவினார்கள் – அதில் அவர் தொடங்கி வைத்த மிகச்சிறந்த மரபு என்பது கிறிஸ்துமஸ் தினத்தன்று இயேசுவை சிறப்பாகத் தியானிப்பது என்பதாகும். நமது குருதேவர், ஒரு நாள் முழுவதும் கிறிஸ்துமஸ் தியானம் என்ற கருத்து இயேசுவால் எனக்கு வழங்கப்பட்டது, அதில் அவர் ஏதேனும் உனக்கு செய்வார் என்று கூறினார். இந்த கிறிஸ்துமஸ் அன்று உங்கள் தியானத்தின் பொழுது, பரமஹம்சாஜியின் மேற்கூறிய ஊக்கமளிக்கும் வார்த்தைகளை எண்ணிப் பாருங்கள். நீங்கள் திறந்த உங்கள் மனதுடன் இயேசுவின் பரிசுகளான தெய்வீக அன்பு, அமைதி, பேரானந்தம் ஆகியவற்றை அணுகும் போது, அவை உங்களிடம் இருந்து பெருகி வழிந்து உங்களது விரிவடைந்த உணர்வு நிலையை ஆசீர்வாதமாக உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும், உங்கள் சமூகத்தினருடனும் மற்றும் உலகத்தாரிடமும் பகிர்ந்து கொள்கிறது.

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பேரானந்தத்துடன் கூடிய கிறிஸ்து நிறைந்த கிறிஸ்துமஸ்.

சுவாமி சிதானந்த கிரி

பதிப்புரிமை © 2020 ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெல்லோஷிப். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

இதைப் பகிர