ஆசிரமத்தைச் சென்றடையும் வழிகள்

விமான நிலையத்திலிருந்து

உள்நாட்டு விமான நிலையத்திற்கும் சர்வதேச விமான நிலையத்திற்கும் (ஐஜிஐ) இடையே 6-7 கி.மீ. தூரம் உள்ளது. நமது ஆசிரமம் அவற்றிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.

வாடகை வண்டி (டாக்ஸி – விமானநிலைய வளாகத்திற்குள் உள்ள “பிரி-பெய்ட்” எனும் முன்-கட்டண வண்டியை அமர்த்திக் கொள்வது விரும்பத்தக்கது) பிடித்தால் வசதியாக ஆசிரமம் சென்றடையலாம், ஆனால் செலவு அதிகமாகும். ஆட்டோ ரிக்‌ஷா அமர்த்திக் கொண்டு சென்றால் செலவு சிறிது குறையும்.

மெட்ரோ இரயில் வழி: சர்வதேச விமான நிலையத்திலிருந்து துவாரகா செக்டார் 21க்கு “ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோ” எனும் விமான நிலைய மெட்ரோ விரைவு வண்டியில் ஏறுங்கள். இங்கு இறங்கி நொய்டா சிட்டி சென்டருக்கு (செக்டார் 32) மெட்ரோ ரயிலைப் பிடியுங்கள். நொய்டா சிட்டி சென்டரிலிருந்து ஆசிரமத்திற்கு (சுமார் 7 கி.மீ தூரம்) ஒரு மூன்று சக்கர வாகனத்தில் ஏறுங்கள்.

இரயில் நிலையங்களிலிருந்து

(பழைய) தில்லி, புதுதில்லி ஆகிய இரண்டு இரயில் நிலையங்களிலிருந்தும் நொய்டா சிட்டி சென்டர் வர மெட்ரோ இரயிலைப் பிடிக்கலாம்.( ராஜீவ் செளக்கில் மாறிக்கொண்டு) பிறகு அங்கிருந்து மேலே கூறியவாறு ஒரு மூன்று சக்கர வண்டியையோ அல்லது டாக்ஸியையோ பிடிக்கவும். ஒருவர் நேராக மூன்று சக்கர வண்டியிலோ அல்லது டாக்ஸியிலோ ஆசிரமம் வரலாம்.

நிஜாமுதின் மற்றும் காஜியாபாத் இரயில் நிலையங்களிலிருந்து வர, அங்கு மெட்ரோ இரயில் இல்லாததால், ஒருவர் மூன்று சக்கர வண்டியிலோ அல்லது டாக்ஸியிலோ வர வேண்டும்.

இன்டர்-ஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து

காஷ்மீர் கேட் ஐ.எஸ்.பி.டி யிலிருந்து நொய்டா சிட்டி சென்டருக்கு (ராஜீவ் செளக்கில் மாறிக் கொண்டு) மெட்ரோ இரயிலைப் பிடிக்கவும். பிறகு அங்கிருந்து ஒரு மூன்று சக்கர வண்டி/ டாக்ஸியில் ஆசிரமம் அடையலாம். ஒருவர் நேராகவே ஆசிரமத்திற்கு மூன்று சக்கர வண்டி, கார், டாக்ஸியில் ஆசிரமம் வரலாம்.

ஆனந்த விஹார் ஐ.எஸ்.பி.டி யிலிருந்து, அங்கு மெட்ரோ இரயில் வசதி இல்லாததால் ஆசிரமத்திற்கு நேராக மூன்று சக்கர வண்டியில்/டாக்ஸியில் வரலாம்.

தனியார் கார் அல்லது டாக்ஸி மூலம்

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆசிரம வழி வரைபடத்தைப் பின்பற்றுங்கள். உதாரணமாக தில்லியிலிருந்து நிஜாமுதீன் பாலம் வழியே யமுனா நதியை கடந்து தேசிய நெடுஞ்சாலை 24ல் நேராக பயணித்து உ.பி மாநில எல்லையைக் கடந்தவுடன் இரண்டாவது போக்குவரத்து சிக்னலில் வலது பக்கம் திரும்புங்கள். பிறகு அந்த வழியில் மூன்றாவது திருப்பத்தில் இடது பக்கம் திரும்ப வேண்டும். ஆசிரமம் அங்கிருந்து முதலாவது வலது திருப்பத்தின் மூலையில் உள்ளது.

யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் நொய்டாவிற்கான பாதை வரைபடம்

இதைப் பகிர