யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சொல்லகராதி

இந்துத்துவம்.  பார்க்க  சனாதன தர்மம்.

பரிசுத்த ஆவி. இறைவனிடமிருந்து, படைப்பைக் கட்டமைத்து தனக்கே உரிய அதிர்வுறும் மகாசாரத்தினால் தாங்கி நிற்பதற்காக, புறஞ்செலுத்தப்படும் புனிதப் பேரண்ட அறிவார்ந்த பேரதிர்வு. இவ்வாறு அது இறைவனின் புனித பேரிருப்பாகிறது. அவனது வார்த்தை, பிரபஞ்சத்திலும் ஒவ்வொரு வடிவத்திலும் சர்வ வியாபகமாக உள்ள இறைவனுடைய பரிபூரண பிரபஞ்ச பிரதிபலிப்பின் வாகனம், கிறிஸ்து உணர்வுநிலை. தேற்றரவாளன், பிரபஞ்ச தெய்வ அன்னை, பிரக்ருதி. பார்க்க  ஓம் மற்றும் மும்மை.

உள்ளுணர்வு. ஆன்மாவின்‌ அனைத்தையும்‌-அறியும்‌ திறன்‌; இது புலன்களின்‌ இடையீடு இல்லாமல்‌, உண்மையின் நேரடியான உள்ளுணர்வுப் புரிதலை அனுபவிக்க‌ மனிதனை ஏதுவாக்குகிறது.

கர்மா/கர்மவினை : இப்பிறவியிலோ அல்லது முந்திய பிறவிகளிலோ செய்த வினையின்‌ பயன்கள்‌. சமஸ்கிருதத்திலிருந்து, க்ரி, செய்தல்‌. இந்து சாத்திரங்களில்‌ விளக்கப்பட்டுள்ளவாறு, சமநிலைப்படுத்தும்‌ கர்மவினை விதி என்பது செயலும் எதிர்ச்செயலும், காரணமும்‌ காரியமும்‌, விதைப்பதும்‌ அறுப்பதும்‌ என்பதாகும்‌. ஒவ்வொரு மனிதனும்‌ இயற்கையான அறவழியில்‌, அவனுடைய எண்ணங்களாலும்‌, செயல்களாலும்‌ அவனுடைய விதியை அவனே நிர்ணயிப்பவனாகிறான்‌. ஒரு வட்டம்‌ மாற்ற முடியாதபடி தன்னிலேயே முழுமையாவது போல்‌, அவன்‌ எவ்வித சக்திகளைத்‌ தனக்குத்‌ தானே விவேகத்துடனோ அல்லது விவேகமின்றியோ செயல்படுத்தியுள்ளானோ அவை, தொடங்கிய இடமான அவனிடமே திரும்பி வந்து சேர வேண்டும்‌. நீதியின்‌ சட்டமாக இருப்பது கர்ம வினையே என்று புரிந்துகொள்வதானது, மனித மனம்‌ கடவுளிடமோ அல்லது மனிதனிடமோ சினந்து கொள்வதிலிருந்து விடுதலையடைய உதவுகிறது. ஒரு மனிதனின்‌ கர்மவினை, நிறைவேற்றப்படும்‌ வரை அல்லது ஆன்மீகரீதியாக கடக்கப்படும்‌ வரை பிறவிதோறும்‌ அவனைத்‌ தொடர்ந்து வருகின்றது. பார்க்கவும் மறுபிறவி சமூகங்கள்.‌ மறுபிறவி. நல்ல அல்லது தீய தன்மையின்‌ அளவு மற்றும்‌ பெரும்பான்மைக்கு ஏற்ப, அந்தந்த இடத்திலோ அல்லது தொலைதூர அளவிலோ விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆகவே ஒவ்வொரு மனிதனுடைய எண்ணங்களும்‌ செயல்களும்‌, இந்த உலகத்தின்‌ மற்றும்‌ அதிலுள்ள அனைத்து மக்களின்‌ நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பங்காற்றுகின்றன.

கர்ம யோகம். பற்றற்ற செயல்‌ மற்றும்‌ சேவை வாயிலாக இறைவனை அடைவதற்கான மார்க்கம்‌. சுயநலம்‌ கருதாத சேவையாலும்‌, தனது செயல்களின்‌ பலன்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாலும்‌, இறைவன்தான்‌ ஒரே கர்த்தா என்று காண்பதாலும்‌, பக்தன்‌ அகந்தையிலிருந்து விடுதலை பெற்று இறைவனை அனுபவிக்கிறான்‌. பார்க்க யோகம்.

கிருஷ்ண உணர்வுநிலை. கிறிஸ்து உணர்வுநிலை; கூடஸ்த சைதன்யம்‌.பார்க்க கிறிஸ்து உணர்வுநிலை .

கிரியா யோகம். ‌.  பல்லாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பு பாரதத்தில்‌ தோன்றிய ஒரு புனித ஆன்மீக விஞ்ஞானம்‌. இது குறிப்பிட்ட தியான உத்திகளை உள்ளடக்கியுள்ளது. இதை ஈடுபாட்டுடன்‌ செய்யும்‌ பயிற்சி, இறைஞானத்திற்கு வழிகோலும்‌. பரமஹம்ஸ யோகானந்தர்‌, கிரியாவின்‌ சமஸ்கிருத மூலம் ‌- க்ரி என்பது, செய்ய, செயல்‌ செய்ய மற்றும்‌ எதிர்ச்செயல்‌ செய்ய எனப்‌ பொருள்படும்‌ என்று விளக்கியுள்ளார்‌; இயற்கை நியதியான காரண, காரியம்‌ என்று பொருள்படும்‌, கர்மா என்ற சொல்லிலும்‌ அதே மூலம்‌ தான்‌ காணப்படுகிறது. இவ்வாறாக கிரியா யோகம்‌ என்பது “ஒரு குறிப்பிட்ட செயல்‌ அல்லது சடங்கு (கிரியா) மூலம்‌ பரம்பொருளுடன்‌ ஐக்கியம் (யோகம்) ஆகும்,” கிரியா யோகம்‌, பகவத்‌ கீதையில்‌ பகவான்‌ கிருஷ்ணனாலும்‌, யோக சூத்திரங்களில்‌ பதஞ்சலியினாலும்‌ மிக உயர்வாகப்‌ புகழப்பட்டுள்ளது. இந்த யுகத்தில்‌ கிரியா யோகம்‌ மகாவதார பாபாஜியினால்‌ புத்துயிர்‌ அளிக்கப்பட்டது. மேலும்‌ இது யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப்‌ இந்தியா/ஸெல்‌ஃப்‌-ரியலைசேஷன்‌ ஃபெலோஷிப்‌ குருமார்களால்‌ அருளப்படும்‌ தீட்சை (ஆன்மீக உபதேசம்‌)  ஆகும்‌. ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்‌ மகாசமாதி அடைந்ததிலிருந்து, அவருடைய ஆன்மீகப்‌ பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப்‌ இந்தியா/ ஸெல்‌ஃப்‌ -ரியலைசேஷன்‌ ஃபெலோஷிப்‌ தலைவரால்‌ (அல்லது தலைவரால்‌ நியமிக்கப்பட்ட ஒருவரால்‌) தீட்சை வழங்கப்படுகிறது.


குண்டலினி. முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் ஒரு நுட்பமான சுருண்ட பாதையில் உறையும் படைப்பாற்றல்மிக்க உயிர்ச் சக்தியின் ஆற்றல்வாய்ந்த அம்சம். சாதாரண விழிப்பு உணர்வுநிலையில், உடலின் உயிர்ச் சக்தி மூளையிலிருந்து முதுகுத்தண்டிற்கு கீழேயும் வெளியேயும் இந்த சுருண்ட குண்டலினி பாதை வழியாக பாய்ந்து, ஸ்தூல உடலுக்கு உயிரூட்டிக் கொண்டு, சூட்சும மற்றும் காரண உடல்களையும், உள்ளுறையும் ஆன்மாவையும், மனித உருவத்துடன் பிணைக்கிறது. தியானத்தின் குறிக்கோளாக இருக்கும் உயர் உணர்வுநிலைகளில் குண்டலினி சக்தி, மூளை-முதுகுத்தண்டு மையங்களில் (சக்கரங்கள்) செயலற்று உள்ள ஆன்மீகத் திறன்களை எழுப்புவதற்கு, முதுகுத்தண்டில் மேல்நோக்கி பாய்வதற்காக நேரெதிராக திருப்பப்படுகிறது. அதன் சுருள் வடிவ உள்ளமைப்பு காரணமாக “பாம்பு சக்தி” என்றும் அழைக்கப்படுகிறது.

கூடஸ்த சைதன்யம்‌. கிறிஸ்து உணர்வுநிலை. கூடஸ்த என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் “மாறாமல் இருப்பது”; சைதன்யம், “உணர்வுநிலை” என்று பொருள்படும்.

லாஹிரி மகாசயர்‌. லாஹிரி என்பது, ஷ்யாமா சரண்‌ லாஹிரியின்‌ குடும்பப்‌ பெயராகும்‌. (1828-1895). மகாசயர் என்பது “பரந்த-மனமுடையவர்‌” எனப்‌ பொருள்படும்‌ சமயரீதியான சமஸ்கிருத பட்டப்பெயர்‌. லாஹிரி மகாசயர்‌ மகாவதார பாபாஜியின்‌ சீடரும்‌, சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வருடைய (பரமஹம்ஸ யோகானந்தரின்‌ குரு) குருவுமாவார்‌. ஏறக்குறைய மறைந்துவிட்ட புராதன கிரியா யோக விஞ்ஞானத்தை பாபாஜி வெளிப்படுத்தியது இந்தச் சீடரான லாஹிரி மகாசயருக்குத்தான்‌. யோகாவதாரமான (“யோகத்தின் அவதாரம்”) இவர், நவ பாரதத்தில் யோகத்தின் மறுமலர்ச்சியில் வளர்ச்சிக்கான வித்திட்டவர், தன்னிடம் வந்த எண்ணற்றோருக்கு சாதி அல்லது இனப் பாகுபாட்டைப் பொருட்படுத்தாமல் போதனையையும் அருளாசிகளையும் வழங்கினார். இவர்‌ அற்புதமான ஆற்றல்கள்‌ பெற்றிருந்த கிறிஸ்து-போன்ற குருவாக மட்டுமின்றி, தொழில்‌ பொறுப்புகளுடன்‌ கூடிய இல்லறத்தானாகவும்‌ இருந்தார்‌. மேலும் தியானத்தை, புறக் கடமைகளை சரியாக நிறைவேற்றுவதுடன் இணைத்து எவ்வாறு ஒரு சீரிய சரிசமநிலையான வாழ்க்கையை அடைய முடியும் என நவீன உலகத்திற்கு மெய்ப்பித்துக் காட்டினார். ‌ லாஹிரி மகாசயருடைய வாழ்க்கை ஒரு யோகியின்‌ சுயசரிதத்தில்‌ விவரிக்கப்பட்டுள்ளது.‌

உயிர்ச்‌ சக்தி. பார்க்க பிராணன்.

உயிர்மின்மங்கள்.‌ பார்க்க பிராணன்.

இதைப் பகிர