ஒய் எஸ் எஸ் குரு பரம்பரை

பகவான் கிருஷ்ணர்

பகவான் கிருஷ்ணர் கீழை நாடுகளில் யோகத்தின் தெய்வீக முன்னுதாரணம். அவர் ஒரு அவதாரமாக (இறைவனின் அவதாரம்) இந்தியா முழுவதும் போற்றப்படுகிறார். பகவான் கிருஷ்ணரின் உன்னத போதனைகள் பகவத் கீதையில் பொதிந்துள்ளன.

இயேசு கிறிஸ்து

பரமஹம்ஸ யோகானந்தரின் பணிகளின் இன்றியமையாத இலக்குகளில் ஒன்று, “பகவான் கிருஷ்ணரால் போதிக்கப்பட்ட ஆதி யோகத்திற்கும் இயேசு கிறிஸ்துவினால் போதிக்கப்பட்ட ஆதி கிறிஸ்துவத்திற்கும் உள்ள முழுமையான இணக்கத்தையும் அடிப்படை ஒற்றுமையையும் வெளிப்படுத்துதல்; மற்றும் இந்த சத்திய கோட்பாடுகளே எல்லா உண்மையான சமயங்களுக்கும் பொதுவான விஞ்ஞானப் பூர்வ அடிப்படை என்பதைக் காண்பித்தல்.”

மகாவதார பாபாஜி

இழந்த கிரியா யோக விஞ்ஞான தியான உத்தியை மகாவதார பாபாஜி இந்த யுகத்தில் புதுப்பித்தார்.

லாஹிரி மகாசயர்

மகாவதார பாபாஜி லாஹிரி மகாசயருக்கு (அவரது சீடர்களால் யோகவதார் என்று பிரபலமாக குறிப்பிடப்படுகிறார்) கிரியா யோக விஞ்ஞானத்தில் தீட்சை அளித்து, இந்த புனிதமான உத்தியை அனைத்து உண்மையாக நாடுபவர்களுக்கும் வழங்குமாறு அறிவுறுத்தினார்.

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்

ஸ்ரீ யுக்தேஸ்வர் லாஹிரி மகாசாயரின் சீடராவார், அவர் ஞான அவதாரம் அல்லது ஞானத்தின் அவதாரம் என்ற ஆன்மீக நிலைக்கு உயர்ந்தார்.

பரமஹம்ஸ யோகானந்தர்

உலகம் முழுவதும் கிரியா யோகத்தை பரப்பும் பணியை நிறைவேற்றுவதற்காக பரமஹம்ஸ யோகானந்தர், அவரது ஆன்மீக பரம்பரை பரம குருமார்கள் மகாவதார பாபாஜி, லாஹிரி மகாசயர் மற்றும் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஆகிய மூவராலும் தனிப்பட்ட முறையில் ஆசீர்வதிக்கப்பட்டார்.