உலகம் முழுவதும் இருந்து செய்திகள்

img_in_memoriam_daya_mata

(ஜனவரி 31, 1914 – நவம்பர் 30, 2010)

மார்ச் 15, 2011

உலகம் முழுவதும் இருந்து ஸ்ரீ தயா மாதாவுக்கு புகழுரை.

ஸ்ரீ தயா மாதாவின் மறைவைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான செய்திகள்-மின்னஞ்சல்கள், கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள்-உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து தலைமையகத்திற்கு  வந்துகுவிந்தன.. சில பக்தர்கள் பல வருடங்களாக மாதாவுடனான சந்திப்புகளின் உத்வேகத்தை நினைவு கூர்ந்தனர், ஆனால் அவரில் பலர் அவர்களை நேரிலேயே சந்திக்காதவர்களும் இருந்தனர், இருப்பினும் அவர்களுடன் ஆத்மார்த்தமான தொடர்பை உளப்பூர்வமாக உணர்ந்தனர்.

இந்த அன்பான ஆன்மீகத் தலைவருடனான மக்களின் தனிப்பட்ட அனுபவங்களின் பெரும் நோக்கத்தை இங்கே அளிக்கப்பட்ட பகுதிகள் வழங்குகின்றன, ஆனால் அனைத்தும் ஸ்ரீ தயா மாதாவின் சாராம்சமாக இருந்த நிபந்தனையற்ற அன்பு மற்றும் இரக்கத்தின் ஒருங்கிணைந்த கருப்பொருளை பிரதிபலிக்கின்றன.

"பல பக்தர்கள் சந்தேகப்படுவது போல், எங்கள் அன்புமிகு தயா மாதாவின் மறைவில், ஆழ்ந்த தியானங்கள் மற்றும் அன்பான உள்ளுணர்வுகளால் நிறைந்த ஆசீர்வாதம் பெற்றதை நான் கண்டேன், மாதாவின் மெல்லிய குரல் நேரடியாக எங்கள் இதயங்களில் மென்மையாக ஒலித்தது. மகிழ்ச்சியான நினைவில் நிற்கும் கடந்த நாட்களைப் போன்ற ஒரு மகத்தான அன்பை நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. எங்கள் அன்புக்குரிய மாதா அவர்களுடைய உயர்நிலையில் கூட எங்களை ஆசீர்வதிக்கிறார், நாங்கள் ஒருபோதும் அது போல் இருக்க முடியாது என்பதை நான் உறுதியாக கூறமுடியும்.

"அவர்களுடைய மறைவு ஒரு ஆழ்ந்த புரிதலையும் வழங்கிய பிரிமிக்கத் தக்க உத்வேகத்தையும் மற்றும் குறிப்பிடத்தக்க சேவையைப் பற்றிய ஆழ்ந்த புரிதலைக் கொண்டு வந்தது - நம் அனைவருக்கும் மட்டுமல்ல, பல ஆண்டுகளாக உலகிற்காகவும்."

"ஒரு மகா துறவியும் சன்னியாசினியும் நேசிக்கப்படுபவரும் பக்தர்களாகிய எங்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் இது ஒரு பெரிய இழப்பு, ஏனெனில் அவர்களுடய கால் தடம் இனிமேல் எப்பொழுதும் இந்த பூமியில் பதியாது. மாதாவின் வாழ்க்கை, அவர்கள் செய்தி மற்றும் அவர்களுடைய சிறந்த சீடத்துவம் அனைத்து காலங்களிலும் முன்னுதாரணமாக அனைவரையும் ஊக்கப்படுத்தியது. என்னைப் பொறுத்தவரை, நான் மாதாவின் புத்தகங்களைப் படித்தேன், அவர்களுடைய ஒலிப்பதிவுகளை பலமுறை கேட்டேன் என்று சொல்லலாம், அவர்களுடைய குரல் என் மனதில் நிரந்தரமாகப் பதிவாகிவிட்டது, அவர்களுடைய வார்த்தைகள் என் இதயத்தில் என்றென்றும் பதிந்திருக்கின்றன. அவர்கள் இப்பொழுதும் எப்பொழுதும் ஆழ்ந்த ஆதாரமாக என் சாதனையில் ஊக்கமளித்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு காலம் எங்களுடன் இருக்கும்படி அவர்களை கூறியதற்கு தெய்வீக அன்னைக்கு நான் நன்றி கூறுகிறேன். அவர்களுடைய இழப்புக்கு வருத்தப்பட்டாலும், தயா மாதாஜிக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் அவர் இப்போதும் எங்கள் தெய்வீக அன்னையின் எல்லையற்ற ஆனந்தக் கடலில் சுதந்திரமாக உள்ளார். குருதேவர் அருகில் இருந்து அவர்கள் தொடர்ந்து எங்களை வழிநடத்தவும், எங்களுக்காக பிராத்திக்கவும் செய்கிறார்என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

"நான் அவர்களுக்கு பல முறை எழுதினேன், எங்கள் ஒவ்வொருவரிடமும் காட்டிய அவருடைய தனிப்பட்ட கவனத்தை எண்ணி நான் வியப்படைந்தேன், அவர்களைப் போலவே அவர்கள் எப்போதும் அன்பு மற்றும் ஞானத்தின் எண்ணங்களுடன் சாதனாவைப் பின்பற்றுவதற்கான நடைமுறை ஆலோசனைகளுக்கு பதிலளித்தல் பொறுமையுடனும் அன்புடனும் அமைந்திருந்தது.

"அவர்கள் தெய்வீக அன்னையின் அன்பின் உறுதியான ஒரு வெளிப்பாடாக இருந்தார் -பேரன்பின் ஓர் உருவகம். , எங்கள் குருவின் பேரன்பு மற்றும் தெய்வீகத்தின் பேரன்பு!

"பரமஹம்ஸ யோகானந்தர் தனது உடலை விட்டு வெளியேறிய பிறகு, 'அன்பு மட்டுமே என் இடத்தை பிடிக்க முடியும்' என்று கூறினார். அன்பே படைப்பவனிடம் எப்பொழுதும் படைப்புகளை திருப்பி இழுக்கும் வலிமையான பிரபஞ்ச சக்தியின் ஈர்ப்பு என்று புனித விஞ்ஞானத்திலிருந்து கற்றுக் கொள்கிறோம். இந்த உலகில் யாரும் 'அன்பை' கொடுக்க முடியாது; தெய்வீக அன்பு நம்முள் பாய்ந்து ஊடுருவும் போது மட்டுமே நாம் நம்மை தூய்மைப்படுத்த முடியும். இதை ஸ்ரீ தயா மாதா அழகாகவும் முழுமையாகவும் செய்தார்.அவர் எங்கு சென்றாலும் தெய்வீக அன்பு அவரிடமிருந்து வெளிப்படும். வருடாந்திர எஸ்ஆர்எஃப் மாநாட்டில் அவர் உரையாற்றும் போது, அவருடைய அன்பின் அதிர்வு போனவென்ச்சர் ஹோட்டலில் உள்ள கலிபோர்னியா பால்ரூமை முழுவதுமாக நிரப்பும், மேலும் அவர்கள் எஸ் ஆர் எஃப் பக்தர்களாக இல்லாவிட்டாலும் அது அனைவராலும் உணரப்படும். மேலும், அவருடைய அன்பு அவரது உண்மையான, களங்கமற்ற பணிவினால் அலங்கரிக்கப்பட்டு மணம் கொண்டிருந்தது. மனித குலத்தின் முழு வரலாற்றில் ஒரு பெரிய அமைப்பின் அறுபது வருடகால தலைவர் வெற்றியின் பெருமையை தனக்கென கொள்ளாத உதாராணமான வேறொருவர் எனக்கு தெரியாது. ஸ்ரீ தயா மாதா அவருடைய படைப்புகள் மற்றும் உரையாடல்களில் அவர் ஒருபோதும் அந்த பெருமையை,தனக்கென எடுத்ததில்லை,அது எங்கு உண்மையாக சேரவேண்டுமோ - நம் குருவுக்கும் மற்றும் இறைவனுக்குமே அளித்தார்... வருங்கால தலைமுறையான எஸ் ஆர் எஃப் சன்னியாசிகள், இளம் சீடர்கள் போன்றவர்கள் ஸ்ரீ தயா மாதாவின் முன்மாதிரியான வாழ்க்கையால் தங்கள் சொந்த வாழ்க்கையை கருணையுடனும் அன்புடனும் பணிவுடனும் வாழ ஊக்குவிக்கப்படுவார்கள்.

நம் உலகம் குழப்பங்களினால் மனிதகுலத்தை விரக்தியில் இருளடையச் செய்யும் பொழுது ஒளிக்கதிர்களாய் வழிகாட்ட பெரும் யோகிகள் உள்ளனர். மேலும் அங்கே அதிக முக்கிய பணிகளோடு அவர்கள் சீடர்களும் உள்ளனர். அந்த ஒளிக்கதிர்களை மங்காமலும் மறையாமலும் தக்கவைத்துக் கொள்வதும் சக்தியுட்டுவதும் அவர்கள் பணியாகும். அதுவே நமது இக்காட்டான காலங்களில் தொடர்ந்து வழிகாட்டுகிறது. அதுதான் எங்கள் மரியாதைக்குரிய ஸ்ரீ தயா மாதாவின் நோக்கம். அவர் எங்கள் குருநாதரின் போதனைகளுக்கும் திட்டங்களும் ஒரு ஒளிப்பதிவாளர் போன்றவர் ஆவார். .

"எங்கள் மிகவும் அன்பிற்குரிய தயாமாதவின் ஆத்மா மாற்றத்தினால் உண்டாகிய உணர்ச்சிக் கொந்தளிப்பை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது கடினம். குருதேவரின் கோட்பாடுகளையும் புனிதத்தையும் மிகவும் நெருக்கமாக பாதுகாப்பதிலுள்ள தீவிரம் துவாபரயுகத்தின் ஈடுஇணையற்றது.

"அவரது குறைபாடில்லா தன்னலமற்ற தன்மை, அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, அவரது வியக்கத்தக்க விசுவாசம், அவருடைய மிகவும் ஆற்றல்மிக்க ஆன்மீகம் மற்றும் அவரது திகைப்பூட்டும் எளிமை ஆகியவை இன்றைய உலகில் மிகுந்த பற்றாக்குறையிலும் மற்றும் மிகவும் காணாமல் போன குணங்கள்; அந்த ஒருவன் (இறைவன்) எந்நேரமாவது, எப்பொழுதாவது நேருக்கு நேர் வந்தே தீரவேண்டுமென்று பேரவா கொண்டவர்க்கு அவரது முழு அன்பையும் பக்தியையும் வழங்கினார். ஒரு சரியான மற்றும் நிகரில்லா முன்மாதிரியாக தன்னை அமைத்ததோடு மட்டுமல்லாமல் நெருங்கிய காலங்களுக்கு நகலெடுக்க முடியாததொரு மரபையும் விட்டுச் சென்றுள்ளார்.

தயா மாதாஜியின் வாழ்க்கையின் நோக்கம் மனித மனநிலையிலிருந்து இலகுவாக நழுவிவிடுகிறது. வார்த்தைகள் சொல்லப்படலாம், புத்தகங்கள் எழுதப்படலாம், ஆனால் இறைவன் மற்றும் குருதேவரின் பணி என்றும் நிலைத்திருக்க அவருடைய முன்மாதிரியான அணுகுமுறை விதிவிலக்கின்றி நாம் அனைவரும், நம் வாழ்வில் பின்பற்ற, செயல்படுத்தப் பார்க்கவேண்டும்.

இறைவன் மற்றும் குருவின் அன்பின் ஒளியை தனக்குள் கொண்டு,தனது அரசனுக்காக அனைத்தையும் கொடுக்க விரும்பும் ஒரு உண்மையான போர்வீரனைப் போல அவர் மெய்யான ஸ்திரத்தன்மை வாய்ந்தவராக இருந்தார்.

"மாதாஜிக்கு எங்கள் கருத்தை தெரிவிக்கவும். அவருடைய அன்பும் இரக்கமும் எங்கள் இதயங்களைத் தொட்டது மற்றும் தெய்வீக உற்சாகத்தை நிரப்பியது."

"தயா மாதாவை நேரில் சந்திக்கும் பாக்கியம் எனக்கு வாய்க்கவில்லை, ஆனால் பல வருட எனது சாதனாவில் பல தடவை அவர் கனவில் எனக்குத் தோன்றினார். ஒரு முறை எனது அன்பு நண்பர் இறப்பதற்கு முந்தைய வாரங்களில் நண்பருக்கான தீவிர பிரார்த்தனையின் போது தோன்றினார். அம்மா வந்து தனது நெற்றியை அழுத்தி, ஆசீர்வதித்து, பிரார்த்தனையின் போது என் நண்பனுக்காக அதையே செய்வதை உள்ளுணர்வாக எனக்கு ஒரு சக்திவாய்ந்த வழியைக் காட்டினார். நீங்கள் பாருங்கள், என் வாழ்க்கையில் மாதாவின் இருப்பு மிகவும் உண்மையான மற்றும் உறுதியான வழியில் இருந்தது, இருப்பினும் அவர்களை உடல் உருவில் சந்திக்கவில்லை.

“நான் கதை சொல்ல விரும்பவில்லை; அவர் என் இதயத்தில் இருக்கிறார் என்பதையே நான் சொல்ல விரும்புகிறேன். அவர் என் தெய்வம். நான் அவரைப் போலவே இருக்க விரும்புகிறேன்."

"2003 ஆம் ஆண்டில், ஆறு மாத இடைவெளியில் என் தாயும் என் கணவரும் மெட்டாஸ்டேடிக் புற்றுநோயால் கண்டறியப்பட்டனர், இருவரும் வாழ குறுகிய காலம் வழங்கப்பட்டது. அவர்கள் ஏறக்குறைய ஒரே சமயத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்டனர். என்னால் கிழக்குக் கடற்கரைக்கு இறுதிப் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது, என் தாய் என் கைகளிலேயே அமைதியாக இறக்கும் பாக்கியம் கிடைத்தது. அவர் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, என் கணவரின் உடல்நிலை மோசம்‌அடைந்ததால், வீடு திரும்ப எனக்கு அழைப்பு வந்தது. நான் வீட்டுக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார், அவர் வாழ இயலாது என்பது எதிர்பார்க்கபட்டது. அன்றைய இரவு நான் தெய்வீக அன்னையிடம் ஆழ்ந்த பிரார்த்தனை செய்தேன், அவள் எப்போதும் என்னுடன் இருப்பதை நான் அறிந்திருந்தாலும், அதை உறுதிப்படுத்த தயவுசெய்து எனக்கு ஒரு மனித உருவில் காட்சியளியுங்கள். நான் என் மையத்தை பராமரிக்க போராடிக் கொண்டிருந்தேன், சில சமயங்களில் துக்கம் மிகுந்தும் இருந்தது.

அடுத்த நாளே எனக்கு தலைமை மையத்திலிருந்து அழைப்பு வந்தது. நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன், ஏனென்றால் நான் தலைமை மையத்தை அழைக்கவோ எழுதவோ இல்லை. அந்த அழகிய குரல் கூறியது, 'தயா மாதாவிடம் இருந்து உங்களுக்கு ஒரு செய்தி இருப்பதால், நீங்கள் ஒரு சன்னியாசினியிடம் பேசுவதற்கான ஒரு சந்திப்பை நான் திட்டமிட விரும்புகிறேன், ஆனால் நான் அதைச் செய்வதற்கு முன்பு, தெய்வீக அன்னை உங்களுடன் இருக்கிறார் என்று நேரடியாகச் சொல்லும்படி கேட்டுக்கொண்டார். 'அந்த வார்த்தைகளைக் கேட்ட உடனேயே நான் முழங்காலிட்டு வார்த்தைகளோ மற்றும் எதுவுமே என் நன்றி உணர்வுகளைக் கூற இயலாது தேம்பி அழுதேன். சில கணங்கள் கழித்து ஒரு சன்னியாசினி தொலைபேசியில் வந்து, அன்பான மாதாஜியின் செய்தியைப் படித்து, என் ஆத்மாவுக்கு ஆறுதல் கூறினார். கடவுள் மற்றும் குருதேவருடன் பிரியமான மாதாஜியின் பரிபூரண குணாதிசயம் மற்றும் அனைவரிடமும் அவருடைய மிகுந்த இரக்கம் மற்றும் அன்புக்கு இது ஒரு ஆழமான எடுத்துக்காட்டு. பிரியமான மாதாஜியை அவரது உடல் வடிவத்தில் சந்திக்கும் பாக்கியம் எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை, ஆனால் அவருடைய அன்பும் இரக்கமும் என் இதயத்திலும் ஆன்மாவிலும் பதிந்துள்ளது.

"அவர்கள் முன்னிலையில் இருப்பது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். நாங்கள் அவருடைய அன்பின் அலைகளில் குளித்தோம், அது எங்களை ஆனந்தக்கண்ணீரில் ஆழ்த்தியது.”

"எங்கள் அன்புக்குரிய தயா மாதா மற்றும் எஸ் ஆர் எஃப் போதனைகளுடன் உண்மையாகவே 'வளர்ந்த' எங்களுக்கு, அவள் எங்களுடன் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது, மேலும் அவளுடைய அன்பை முன்னெப்போதையும் விட உறுதியாக உணர்கிறேன். இத்தனை வருடங்களாக நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கையில் அவர்கள் என் அருகிலேயே ஓடிக்கொண்டு இருப்பதாகவும் மேலும் நான் தடுமாறும் போது என்னை நிலைநிறுத்த அவர்கள் தயாராக இருப்பதை உணர்கிறேன். எப்படியோ நான் நன்றாக இருப்பேன் என்று எனக்குத் தெரியும்; நான் எவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டுமோ அவற்றை உதாரணமாக இருந்து எனக்குக் அவர் கற்றுக் கொடுத்தார். அவர் நிலையான தியாகத்துடனும் மற்றும் பரமஹம்ஸ யோகனந்தர் நமக்களித்த போதனைகளின் அங்கீகாரத்துடனும் எப்பொழுதும் நேசிக்கப் படுகிறோம். இப்போது அந்த அன்பை அனைவருக்கும் பரப்புதல் வேண்டும்.

"எங்கள் அன்புக்குரிய ஸ்ரீ தயா மாதாவின் மறைவைப் பற்றி நான் கேள்விப்பட்ட போது, அது என்னை வேதனைப்படுத்தியது எனது முழுமையான ஆன்மீகப் பாதை நமது அன்பான மாதாவின் தலைமையுடனும் மற்றும் ஆன்மீகத் தலைமைப் பொறுப்புடனும் முப்பது வருடங்கள் அமைந்திருந்தது. நான் “உங்களுக்குள் மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்கும்” (ஃபைன்டிங் தி ஜாய் வித்தின் யூ) மாதாவின் புத்தகத்தை படித்த போது 1948-ல் அவரது மரணத்திற்கு அருகில் இருந்த அனுபவத்தை படித்தேன். அறுபத்திரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட இந்த கடினமான பணியை எங்கள் ஆன்மீக குடும்பத்தின் மற்றும் எஸ் ஆர் எஃப் அமைப்பின் அடித்தளமாகவும் அவர் பொறுப்பு எடுத்துக் கொண்டது எனக்கும் மிகுந்த திருப்தியையும் மற்றும் நன்றி உணர்வையும் என்னுள் நிரப்பியது. அப்போது அவர் அனுபவித்த அந்த அருமையான அன்பில் இப்போது முழுமையாக மூழ்கிவிட்டார் என நான் நம்புகிறேன்.

"நான் அவருக்கு எழுதும் போதெல்லாம் அவர் எப்போதும் எனக்கு பதிலளித்தார். பதில் தேவையில்லை என்று நான் கருதினாலும் அவர் எப்படியும் அனுப்பிவிடுவார். உலகெங்கிலும் உள்ள எத்தனையோ பேரை அவர் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் மிகவும் சிரத்தையோடு அறிவுரை கூறி பிரார்த்தனை செய்தார். தயா மாதா ஒரு உண்மையான துறவி. நான் சந்தித்த மிக அழகான ஆன்மா அவருடைய உதாரணம் மற்றும் அவருடைய நிபந்தனையற்ற அன்பின் காரணமாக என் வாழ்க்கை பெரிதும் மாறிவிட்டது.

"நான் 2001-ல் எனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினேன். தயா மாவிடம் நான் அவருடைய ஆசீர்வாதத்தை கேட்டு எழுதினேன், ஆனால் அவருடைய மகத்தான பொறுப்புகளையும் அவரது நேரத்திலுள்ள பல கோரிக்கைகளையும் அறிந்திருந்ததால் பதிலை எதிர்பார்க்கவில்லை. என்னை ஆச்சரியப்படுத்த, ஒரு பதில் உடனடியாக வந்தது, என் முயற்சியை ஊக்குவித்து விரிவான ஆலோசனைகளை வழங்கியது. அது சாராம்சம் இதமாகவும், ஆத்மார்த்தமாகவும் இருந்தது, அவர் உண்மையில் என்னை இதுவரை பார்த்திராதவர் என்றாலும் நெடுங்காலமாக தெரிந்து வைத்திருப்பது போல் இருந்தது.

"இது உண்மையிலேயே, எனக்கு அதிர்ஷ்டகரமானதாக இருந்தது - நான் அம்மாவின் கடிதத்தை கட்டமைத்து இத்தனை வருடங்களாக என் அலுவலக அறையில் வைத்திருந்தேன். அவள் கடிதம் வந்தபோது ஒரு நல்ல சகுனமாக நான் பார்த்தேன், ஒருவேளை அது எதிர்பாராததாக இருந்ததினால். அவருடைய அப்பழுக்கற்ற குணமும் சேவை குணமும் என்னைப் போன்ற பெருநிறுவனக் “காடுகளில்” ஒளி விளக்குக்களானது. அவருடைய பொன்மொழியான “அன்பு, சேவை, மற்றவற்றை இறைவனிடம் விட்டுவிடுதல்“ வியாபார பயணத்தில் எனக்கு மிகவும் உக்கமளித்தது. தொடர்ந்து எட்டு தசாப்தங்களாக குருவின் கொள்கைகளை களங்கமற்ற முறையில் நிலைநாட்டியதற்காக அவர் மிகவும் பெருமையடையகிறரார்!

"தயா மாதாஜியை நான் நேரில் சந்தித்ததில்லை, ஆனால் அவர் உடலை விட்டு வெளியேறுவதை நான் எப்பொழுதும் அறிந்திருப்பது போல் உணர்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் அவர் மலை போன்ற வலிமையையும் பாதுகாப்பையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவே தோன்றியது, மேலும் அவர் அங்கு இருப்பது எனக்கு ஆறுதல் அளித்தது ... அவர்கள் மனித உருவில் அன்பு, அருள் மற்றும் ஞானத்தின் உருவகமாகவும் இருந்தார்.

"அவர் என் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை என்னால் முழுமையாக விவரிக்க முடியாது: அவர் எனக்கு பெண்மை, தெய்வீக அழகு மற்றும் அன்பின் மாதிரியாக இருந்தார்கள்."

"அன்புள்ள ஸ்ரீ தயா மா .... பல ஆண்டுகளாக வந்த உங்கள் கடிதங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். குருதேவரும் நீங்களும் என் வாழ்க்கையை மாற்றியுள்ளீர்கள். உங்கள் அறிவுரை, நிபந்தனையற்ற அன்பு மற்றும் இடைவிடாத ஆசீர்வாதம் எனக்கு எப்போதும் உதவியது. அம்மா, நான் உங்களை எப்போதும் நேசிக்கிறேன். உங்கள் ஆசிர்வாதத்திற்காக நான் இன்னும் என் இதயத்தையும், மனதையும், ஆன்மாவையும் திறப்பேன். உங்கள் “அமைதியான இதயத்தில் நுழையுங்கள்” (என்டர் தி குயட் ஹார்ட்) எனும் உங்கள் பரிசுத்த புத்தகம் தான் எனது தினசரி பைபிள்!

1970-களின் பட்டமளிப்பு விழாவிற்கு பின்னர், ஸ்ரீ தயா மாதா பக்தர்களுக்கு வழங்கிய சத்சங்கத்தில் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவருடைய பேச்சுக்குப் பிறகு, ஒவ்வொரு பக்தரும் தேவாலயத்தை விட்டு வெளியேறும்போது அவர் வாழ்த்தினாள். நான் அவரிடம் பிரணாம் சொன்னபோது, அவர் கண்களைப் பார்த்தேன். இது முடிவிலி, கடவுளின் கண்களைப் பார்ப்பது போல் இருந்தது. அவை முடிவற்ற ஆழத்தில் இருந்தன. . நான் இதை ஒருபோதும் அனுபவித்ததில்லை. அவர் சிரித்துக்கொண்டே என்னை எஸ்‌ஆர்‌எஃப் தலைமையகத்திற்கு வரவேற்றாள், நான் திகைப்புடன் தேவாலயத்தை விட்டகன்றேன். இந்த அனுபவத்தை நான் என்றும் மறந்ததில்லை...

குருதேவரைத் தெரியாதவர்களாகிய எங்களுக்கு, அவர் கற்பித்த எல்லாவற்றிற்கும் அவர் ஒரு வாழும் உதாரணமாவார். "

"பல வருடங்களுக்கு முன்பு, அம்மா எஸ்‌ ஆர்‌ எஃப் தலைமை மையத்தில் ஸ்ரீ தயா மாதாவை சந்திக்க ஒரு பக்தர்கள் குழுவுடன் வருமாறு நான் அழைக்கப்பட்டேன். நாங்கள் நூலகத்தில் அமர்ந்திருந்தபோது, அவர் எங்களுக்கு ஒரு முறைசாரா சத்சங்கத்தைக் கொடுத்தாள். தயா மாதாவின் கண்களால் நான் முற்றிலும் மாற்றப்பட்டேன். 'கடல்சார் பார்வை' என்ற சொற்றொடரை நான் கேள்விப்பட்டிருந்தேன், ஆனால் இதுவரை, ஒருவரின் அது போன்ற ஆழம், வலிமை மற்றும் அழகான கண்களைப் நான் பார்த்ததில்லை. எங்கள் அன்பான மாதா வாழ்ந்த அதே காலத்தில் இந்த பூமியில் நானும் வாழ்ந்ததை பெருமையாக கருதுகிறேன். ”

“தயா மாதா என் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று என்னால் விவரிக்க கூட முடியவில்லை. ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக, அவருடைய பேச்சுக்களைக் கேட்பது அல்லது அவளுடைய வார்த்தைகளைப் படிப்பது என் தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது, அவை உண்மையில் என் வாழ்க்கையை வடிவமைத்தன. தவறாமல் அவர் என்னை உற்சாகத்துடனும் ஆன்மீக உறுதியுடனும் இறைவனுக்காக ஏங்கவும் வைத்தாள். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, நெருக்கமான, இனிமையான, அன்பான, நம்பிக்கையான மற்றும் தெய்வீக அன்பனுடன் போதை தரும் நட்பை வளர்க்க அவள் எனக்கு உதவினாள்.

தயா மா என் தியானங்களை இறைவனோடு தொடர்பு கொள்ளும் கணங்களாக மாற்ற எனக்கு உதவினார். என் மனதில் இறைவனின் இருப்போடு கடமைகளை அன்பின் செயல்களாக மாற்ற அவர் எனக்கு உதவினாள். சீடராக இருப்பதன் அர்த்தம், நண்பனாக இருப்பதன் அர்த்தம், தாழ்மையான வேலைக்காரனாக இருப்பதன் அர்த்தம், தலைவராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை மா எனக்குக் காட்டினார் - ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அன்பன் என்றால் என்ன என்பதைக் காட்டினாள் . இறை பக்தி எனும் போதை பருகிய உன்மத்தன் ஒருவன்."

"அவளுடைய இருப்பு, சாதனைகள், எடுத்துக்காட்டாக, பல தலைமுறைகளாக ஒரு நட்சத்திரத்தைப் போல பிரகாசிக்கும். இந்தியாவின் மிகச் சிறந்தவர்கள் லாஸ் ஏஞ்சலீஸ் ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவின் வடிவத்தில் வாழ்ந்தனர்.

"அவருடைய வாழ்க்கைக் கதை பல தொகுதிகளாக எனக்குள் பேசுகிறது. குருதேவர் மீதான மாறாத அவரது பக்தி மற்றும் எஸ் ஆர் எஃப்-ன் தலைமைப் பொறுப்பும் ஆச்சரியமூட்டுகிறது. இறைவனுடன் ஆழ்ந்த தொடர்பைப் பயிற்சி செய்வதன் மூலம் ஒரு ஆன்மீக வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று அவர் எனக்கு தொடர்ந்து உத்வேகம் கொடுத்தாள். அவர் என் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தினார் மற்றும் தொடர்ந்து ஏற்படுத்துகிறார் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" .

"அவளைப் பார்த்ததுமே, சந்தேகத்தின் எந்த நிழலையும் தாண்டி, ஸ்ரீ தயா மாதா ஒளியின், எல்லா அன்பும், நன்மையும் உடையவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை, ஸ்ரீ தயா மாதா ஒரு உத்வேகத்தின் விவரிக்க முடியாத ஆதாரமாகவும், பரமஹம்ஸ யோகானந்தரின் உண்மையான சீடர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு எடுத்துக்காட்டு.

"அம்மாவை நினைக்கும் போது நான் எப்போதும் அன்பை உணர்கிறேன்."

"பரந்த பசிபிக் பெருங்கடல் இனி ஸ்ரீ தயா மாதாஜியின் காந்த ஈர்ப்பிலிருந்து என்னை பிரிக்காது. எங்கள் அன்புக்குரிய சங்கத்தலைவி, தலைவர், ஆசிரியர், நண்பர் தனது குருவிடம், ஒளி உலகிற்கு சென்று விட்டார் . ஆனந்தத்தின் அலைகள் அவளுடைய இனிமையான மகிழ்ச்சியால் எங்கள் இதயங்களைக் கழுவுகிறது. நாங்கள் கரையில் எஞ்சியிருந்தாலும், நாங்கள் எங்களை இழக்கவில்லை அல்லது அவள் குருதேவரின் பக்கத்தில் இருக்கிறாள் என்று வருத்தப்பட தேவையில்லை. குருவும் சீடரும்-அவர்களின் அன்புச் சுடரொளிகள் உலகம் முழுவதும் சென்றடைகின்றன. இரக்கத்தின் தாயே ,தங்கள் கருணையான வாழ்க்கைக்கு நன்றி. ”

"பூமியிலோ அல்லது சொர்க்கத்திலோ, ஸ்ரீ தயா மாதா என் பாதையில் எனக்கு முன்னே ஒளிக்காட்டுகிறர்.“

இதைப் பகிர