மகாவதார பாபாஜி

மகாாவதார பாபாஜி

மகாவதார பாபாஜியின் பிறப்பு மற்றும் வாழ்க்கை தொடர்பான வரலாற்றுப் பதிவுகள் எதுவும் இல்லை. பரமஹம்ஸ யோகானந்தர் ஒரு யோகியின் சுயசரிதத்தில், இந்த மரணமற்ற அவதாரம் இந்தியாவின் தொலை தூர இமாலயப் பகுதிகளில் எண்ணற்ற ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார், ஆசீர்வதிக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே அரிதாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார் என்று எழுதியுள்ளார்.

மகாவதார பாபாஜிதான் இழக்கப்பட்டிருந்த கிரியா யோக விஞ்ஞான தியான உத்தியை இந்த யுகத்தில் மீண்டும் உயிர்ப்பித்தவர். தனது சீடர் லாஹிரி மகாசயருக்கு கிரியா தீட்சையை வழங்கியபோது, பாபாஜி கூறினார், “நான் இந்த பத்தொன்பதாவது நுற்றாண்டில் உன் மூலமாக இவ்வுலகிற்கு அளிக்கும் கிரியா யோகம், கிருஷ்ணர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அர்ஜுனனுக்கு அளித்த அதே விஞ்ஞான முறையின் புனருத்தாரணமாகும். பிறகு அது பதஞ்சலிக்கும், கிறிஸ்துவிற்கும், புனித யோவான், புனித பவுல் மற்றும் வேறு சீடர்களுக்கும் தெரிந்திருந்தது.”

1920-ல் பரமஹம்ஸ் யோகானந்தர் அமெரிக்கா புறப்படுவதற்குச் சற்று முன்பு, மகாவதார பாபாஜி கல்கத்தாவில் உள்ள யோகானந்தரின் வீட்டிற்கு வருகை புரிந்தார். அங்கு அந்த இளம் துறவி, தான் மேற்கொள்ளவிருக்கும் இறைப்பணி தொடர்பாக தெய்வீக உத்தரவாதத்தை வேண்டி ஆழ்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். பாபாஜி அவரிடம் கூறினார்: “உன்னுடைய குருவின் கட்டளைப்படி நீ அமெரிக்கா செல்வாய், பயப்படாதே: நீ பாதுகாக்கப்படுவாய். மேலை நாடுகளில் கிரியா யோக முறைகளைப் பரப்ப நான் உன்னைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.”

மகாவதார பாபாஜியைப் பற்றி இன்னும் அதிகமாகப் படியுங்கள்: நவ பாரதத்தின் மகாவதார பாபாஜி

மகாவதார பாபாஜியிடமிருந்து ஓர் அருளாசி

இதைப் பகிர