சொர்க்கத்திலிருந்து வரும் ஒளி போல

சொர்க்கத்திலிருந்து வரும் ஒளி போல

முக்தி மாதா

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பரமஹம்ஸ யோகானந்தரின் சீடரான, முக்தி மாதா (1922-2008) 1945 -ல் குருவை சந்தித்த ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் -ன் சன்னியாசி சீடர். இங்கே இந்த குறுந்தகடு பதிவு பகுதிகளில், அவர் பரமஹம்ஸருடனான சில அனுபவங்களை விவரிக்கிறார்.

“அவர் பிரபஞ்சத்தைப் போன்றவர்: அனைத்தையும் அறிந்தவர், அனைத்தையும் உணர்ந்தவர். அவரிடம் வந்த ஒவ்வொரு ஆன்மாவிற்குமான அவரது அன்பு: அற்புதமானது, அசாதாரணமானது, புனிதமானது, சொர்க்கத்திலிருந்து வரும் ஒளியைப் போல.

A hundred thousand unseen veils were swiftly pulled back….
From the CD “Like the Light From Heaven” (7:01 minutes)

1945 ஆம் ஆண்டின் இறுதியில் எதிர்பாராத விதமாக நான் ஸெல்ஃப்-ரியலைசேஷன் போதனைகளுக்கும் குருதேவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டேன். நான் என் வாழ்வில் ஏதோ ஒன்று வரப்போவதை உள்ளுணர்வாக யூகித்தேன், “இறைவா, நீ இருக்கிறாய் என்றால், அதை துணிவாக எனக்கு நிரூபிப்பாய்.” இது மிகவும் வலுவான கோரிக்கையாக இருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஒரு நண்பர் வந்து, “நாம் ஹாலிவுட்டுக்குச் செல்வோம்” என்று கூறினார்.

நாங்கள் ஒரு தேவாலயத்திற்கு செல்வோம் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை- ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் தேவாலயம். என் நண்பர் பெயரை சொன்னபோது, “சரி, இதன் பொருள் என்ன?” மதத்தைப் பற்றிய சில வகையான தத்துவார்த்த சிந்தனைகளைப் பற்றி ஒரு தத்துவ போதகர் விவாதிப்பார் என்று நான் நினைத்தேன்.

ஆனால் குருதேவர் தோன்றியபோது அவரைப் பார்த்தவுடன்நான் நினைத்தேன், “இவர் சாதாரணமானவர் அல்ல. இந்த மனிதர் இறைவனை அறிவார் ” நான் அடிக்கடி நினைப்பேன், “நீங்கள் யாரொருவருக்கும் சர்வ வல்லமையை எப்படி விளக்க முடியும்?” நம் ஒவ்வொரு எண்ணத்தையும், ஒவ்வொரு உணர்வையும், நாம் எங்கிருந்து வந்தோம், எங்கு செல்கிறோம் என்பதை அவர் அறிந்திருந்தார். (நல்ல வேளை யாரோ ஒருவருவராவது அறிந்துள்ளார்!) ஆனால் ஹாலிவுட் கோவில் முதல் அறிமுகத்திற்குப் பிறகு, நான் கட்டிடத்தை விட்டு வெளியேறியபோது நான் உடல் ரீதியாக வெளியேறினேன். ஆனால் மற்றபடி இல்லை என்று எனக்குத் தெரிந்தது.

நான் வளரும் போது, ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு ஜோடி பழுப்பு நிற கண்கள் வரைவேன். அந்த கண்களில் நான் நித்தியத்தின் வெளிப்பாட்டை உருவாக்க முயற்சிப்பேன். மேலும் என்னுடைய ஒருமுகப்பாடு சில சமயங்களில் மிகவும் கூர்மையாக இருக்கும், அதனால் அவர்கள் எனக்காக உயிரோடு வந்தது போலவே இருந்தது; அவை உண்மையானவை. பின்னர் நான் குருதேவரைப் பார்த்தபோது, அத்தகைய கண்களைப் பார்த்தேன்.

அவர் பிரபஞ்சத்தைப் போன்றவர்: அனைத்தையும் அறிந்தவர், அனைத்தையும் உணர்ந்தவர். அவரிடம் வந்த ஒவ்வொரு ஆன்மாவிற்குமான அவரது அன்பு: அற்புதமானது, அசாதாரணமானது, புனிதமானது, வானத்திலிருந்து வரும் ஒளியைப் போல
முக்தி மாதாவின் பரமஹம்ஸ யோகானந்தருடனான வாழ்க்கை நினைவுகள் பற்றிய முழுமையான உரைக்கான குறுந்தகடை ஆர்டர் செய்யவும்.

இப்பொழுதே ஆர்டர் செய்யுங்கள்

இதைப் பகிர